நான் தமிழும் ஆங்கிலமும்தான் கற்றேன்.. இந்தி தெரியுமா கேள்விக்கு கனிமொழி தந்த பதில்-ரவிக்குமார் எம்பி
சென்னை: தாம் தமிழும் ஆங்கிலமும்தான் கற்று இருப்பதாக லோக்சபா எம்.பி. கனிமொழி தம்மிடம் தெரிவித்ததாக ரவிக்குமார் எம்.பி. சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
திமுகவின் கனிமொழி எம்.பி.யிடம், இந்தி தெரியாததால் நீங்கள் இந்தியரா? என விமான நிலையத்தில் தொழிலகப் பாதுகாப்பு படை அதிகாரி கேள்வி எழுப்பியது நாடு முழுவதும் சர்ச்சையாகவும் விவாதப் பொருளாகவும் வெடித்தது. மேற்கு வங்கம், கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் கனிமொழிக்கு ஆதரவாக குரல்கள் கிளம்பின.

இன்னொருபக்கம், 1989-ல் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேவிலால் இந்தியில் பேசினார்; அதை அப்போதே கனிமொழிதான் தமிழில் மொழிபெயர்த்தார் என்கிற தகவலும் பரப்பப்பட்டு வந்தன. இது தொடர்பான புகைப்படங்கள் என்ற தலைப்பிலும் சில படங்கள் வந்தன.
ஆனால் நடிகர் சிவகுமார் குடும்பத்தினருடனான கருணாநிதியின் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது என தெரியவந்தது. இந்த நிலையில் லோக்சபா எம்.பி. தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ஒரு ஃபேக் நியூஸ் ஒரு விளக்கம்
1989 இல் தேவிலால் சென்னை வந்தபோது அவர் சென்னை கடற்கரைக் கூட்டத்தில் இந்தியில் பேசியதாகவும் அதை கனிமொழி அவர்கள் அப்போது தமிழில் மொழிபெயர்த்ததாகவும் ஒரு பொய்ச்செய்தியை சில நபர்கள் சமூக வலைதளங்களில் பரப்பிக்கொண்டுள்ளனர்.
அதுகுறித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்களிடம் கேட்டேன். ' நான் தமிழும் ஆங்கிலமும்தான் கற்றேன் ' என்று பதில் சொன்னார்.
இவ்வாறு ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications