டெல்லி அரசியலுக்கு முழுக்கு.. தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் களமிறங்குகிறார் கனிமொழி? எந்த தொகுதி?
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, தனது அரசியல் பயணத்தில் முக்கிய திருப்புமுனையை நோக்கி நகர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது.
பல ஆண்டுகளாக தேசிய அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவர், மாநில அளவிலான தேர்தல் அரசியலுக்குள் நுழையும் முக்கியமான நகர்வாக இது பார்க்கப்படுகிறது.

நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி, 2026 தேர்தலுக்குப் பிறகு கனிமொழி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்து, டெல்லி அரசியல் களத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதாவது சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்ற பின் எம்பி பதவியை ராஜினாமா செய்வார். எம்பியாக தமிழகத்தின் குரலை தேசிய அளவில் வலுவாக ஒலிக்கச் செய்த அவர், இனி மாநில அரசியலில் கவனம் செலுத்தும் திமுக தலைமை எடுத்த ஒரு வியூக முடிவாக இது கருதப்படுகிறது.
தமிழக அரசியலுக்கு திரும்பும் கனிமொழி
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், தமிழக அரசியலில் மேலும் நேரடியான பங்களிப்பை வழங்க கனிமொழி முனைந்துள்ளார். அவர் வெற்றிபெற்றால், மாநில அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது அனுபவம், அரசியல் முதிர்ச்சி, மற்றும் வலுவான தகவல் பரிமாற்றத் திறன் ஆகியவை மாநில நிர்வாகத்திற்குப் பேருதவியாக இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் பெண்கள் இருந்தாலும்.. வலுவான முகம் போன்ற பெண் அமைச்சர்கள் இல்லை. அதை சரிகட்டவே கனிமொழியை களமிறக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.
கனிமொழி குழு
ஏற்கனவே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் கனிமொழிக்கு ப்ரீ ஹேண்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற பெயரில் நடத்தப்பட்டு கனிமொழி மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டதற்கு இதுவே காரணம் என்கிறார்கள் .
அரசியல் மற்றும் கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த திருச்செந்தூர் தொகுதி, சட்டமன்ற அரசியலில் அவர் நுழைவதற்கு ஏற்ற வலுவான தேர்வு என கருதப்படுகிறது. இத்தொகுதியில் திமுகவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் வாய்ப்பாக இந்த நகர்வைப் பார்க்கும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள், முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனிமொழி திட்டம்
கனிமொழியின் இந்த அரசியல் நகர்வு, திமுகவின் நீண்டகால தலைமைக்கான திட்டமிடலில் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது. கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மூத்த தலைவர்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வருவது நிலையான ஆட்சிக்கு அவசியம் என தலைமை கருதுகிறது. நாடாளுமன்றத்திலிருந்து மாநில சட்டமன்றத்திற்கு இடம்பெயர்வது, தமிழக நலன் சார்ந்த அரசியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதன் அடையாளமாக உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், கனிமொழியின் இந்த திட்டம் தமிழக அரசியலில் தீவிர விவாதங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவின் எதிர்கால வியூகம் மற்றும் அதன் தலைமை கட்டமைப்பை வடிவமைப்பதில் அவரது இந்த முடிவு முக்கியப் பங்காற்றும் எனக் கூறப்படுகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications