கர்நாடக காங்கிரஸ் "போர்வாள்" டி.கே.சிவகுமாருக்கு சிக்கல்? திடீரென தம்பி வேட்புமனு தாக்கல்! ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் டிகே சிவக்குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தான் அவரது தம்பியான காங்கிரஸ் எம்பி டிகே சுரேசும் திடீரென்று இன்று வேட்புமனுத்தாக்கல் செய்திருப்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தான் டிகே சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னணியில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ராமநகர் மாவட்டம் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை தோற்கடிக்கும் நோக்கத்தில் பாஜக சார்பில் பலமான வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். அதன்படி டிகே சிவக்குமாரை எதிர்த்து பாஜக சார்பில் தற்போதைய வருவாய்த்துறை அமைச்சர் ஆர் அசோக் களமிறக்கப்பட்டுள்ளார். இதுதவிர அசோக் பெங்களூர் பத்மநாபநகர் சட்டசபை தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

இதையடுத்து டிகே சிவக்குமார் மற்றும் ஆர் அசோக் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். டிகே சிவக்குமாரை தோற்கடிக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதற்கிடையே தான் ஆர் அசோக்கை எதிர்த்து பெங்களூர் பத்மநாபநகர் தொகுதியில் டிகே சிவக்குமாரின் தம்பியான காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. மேலும் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் டிகே சுரேஷ் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்ற செய்திகளும் வெளியாகின.
இந்நிலையில் தான் டிகே சுரேஷ் இன்று கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் ஏற்கனவே அவரது அண்ணனும், மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமார் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எதற்காக டிகே சிவக்குமார், டிகே சுரேஷ் ஆகியோர் ஒரே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டிகே சிவக்குமார் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்பட பல்வேறு விசாரணை அமைப்புகளிடம் 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சில வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. இதனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது நடந்தால் அங்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் இல்லாத நிலை ஏற்படும். இதனால் தான் முன்னெச்சரிக்கையாக டிகே சுரேஷ் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications