'தமிழர்கள் அடிமைகள்' என பேசிய கர்நாடகா நீதிபதி- நடிகை கஸ்தூரி கைதை கோர்த்துவிட்டு சீமான் கண்டனம்!
சென்னை: தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் தம்முடைய கருத்தைத் திரும்பப்பெற்று, தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். மேலும் கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் தமிழர்களை இழிவுப்படுத்தி பேசியதற்கு தமிழ்நாடு அரசு எவ்வித எதிர்வினையும் ஆற்றாதது ஏன்? என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை: கர்நாடக மாநிலத்தில் கடந்த 26.11.2024 அன்று பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற, கர்நாடகம் தனிமாநிலமாக உருவெடுத்த 'ராஜ்யோத்சவா' விழாவில் பங்கேற்று பேசிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரகுமார் அருண், ஆங்கிலேயர்கள் ஆட்சியின்போது, 'பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில் தமிழர்கள் அடிமைகளாக இருந்தனர், ஆனால் கன்னடர்கள் அப்படி இருக்கவில்லை', எனவும் பெங்களூருவில் தமிழர்கள் உள்ளிட்ட பிறமொழியினர் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது எனவும் பேசி இருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய துணைகண்டத்தில் வாழ்ந்த அனைத்து மக்களுமே அடிமைப்பட்டிருந்தனர். தமிழர்கள் மட்டும் அடிமைப்பட்டு இருந்ததுபோல் நீதிபதி அருண் பேசியிருப்பது வேண்டுமென்றே தமிழர்களைச் சீண்டிப்பார்க்கும் சுடுசொல்லாகும்.
தமிழ் மக்களின் விடுதலை உணர்வானது மற்ற மாநிலத்தவரின் உணர்வுக்கு சற்றும் சளைத்ததல்ல. இந்த நாட்டின் விடுதலைக்குப் போராடி உயிர் ஈகம் புரிந்த எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீரர்களைத் தந்த மண் தமிழர் மண். பெங்களூரு, குடகு உள்ளிட்ட தமிழர்கள் காலங்காலமாக வாழ்ந்துவரும் பல நிலப்பகுதிகளை மொழிவாரி மாநில எல்லைப்பிரிப்பின்போது தமிழ்நாடு இழந்தது. அதுமட்டுமின்றி, தமிழர்களின் உழைப்பைச்சுரண்டி அவர்களின் குருதியில் பொன் விளைந்த நிலம் கோலார் பகுதியாகும். எனவே பூர்வகுடி தமிழர்களை அண்டிப்பிழைக்க வந்த அகதிகள் போலவும், தமிழர்கள் ஆங்கிலேயருக்கு ஆயுட்கால அடிமைகளாக இருந்ததுபோலவும் நீதிபதி இந்திரகுமார் அருண் பேசி இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் தமிழர்களை இழிவுப்படுத்தி பேசியதற்கு தமிழ்நாடு அரசு எவ்வித எதிர்வினையும் ஆற்றாதது ஏன்? கர்நாடக நீதிபதி கூறிய கருத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களை இழிவுப்படுத்தி பேசிவிட்டதாக கூறி, கொதித்தெழுந்து தனிப்படை அமைத்து சிறையிலடைத்த திமுக அரசு தமிழர்களை இழிவுப்படுத்திய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன்? தமிழர்கள் என்றால் அமைதிகாப்போம், மற்ற இனத்தவர்களுக்காகத் துடிதுடிப்போம் என்றால் தமிழ்நாட்டில் தற்போது நடைபெறுவது யாருக்கான ஆட்சி என்பது இதிலிருந்தே தெளிவாகிறது.
ஆகவே, தமிழர்களை இழிவுப்படுத்தி பேசிய கர்நாடக நீதிபதி இந்திரகுமார் அருண் தம்முடைய கருத்தைத் திரும்பப்பெற்று, தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications