மேகதாது அணை.. காவிரி நதிநீர் ஆணையத்தில்.. விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்த கர்நாடக அரசு
சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக எம்பிகள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் விஷ்வேஸ்வர், காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை குறித்து, கர்நாடக அரசு அறிக்கை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் ஜீவ நதியாகக் கருதப்படும் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை ஒன்றைக் கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கர்நாடக அரசு இந்த அணையைக் கட்டினால் டெல்டா பகுதியில் உள்ள லட்சக் கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

இருப்பினும் கடந்த சில வாரங்களுக்கு முன் கர்நாடக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றான மேகதாது விவகாரத்தில் கட்சி பேதமின்றி அனைவரும் ஒரே அணியில் திரண்டுள்ளனர். இது தொடர்பாகப் பிரதமர் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரைத் தமிழக சட்டசபை கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு கடந்த சில நாட்களுக்கு முன் தான் நேரில் சந்தித்து வலியுறுத்தியது.
இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மதிமுக எம்பி வைகோ மற்றும் திமுக எம்பி சண்முகம் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் விஷ்வேஸ்வர், காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாது அணை குறித்து, கர்நாடக அரசு அறிக்கை அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications