கள்ளக்காதலி கையில் மிளகாய் தூள்.. நள்ளிரவில் நடக்கும் ஏடாகூடங்கள்! மனைவி துரோகத்தால் உறைந்த கர்நாடகா
சென்னை: ஹனிமூன் கொலைகள், பூச்சி மருந்து கொலை, சாப்பாட்டில் விஷம், என தங்களது கள்ளக்காதலனுக்காக, தாலி கட்டிய கணவனை கொலை செய்ய பெண்கள் துணிந்து வருகிறார்கள்.. மற்றொருபுறம், தகாத உறவில் ஈடுபட்டதையறிந்து, ஆத்திரத்தில் மனைவிகளை கொல்லும் கணவன்மார்களும் பெருகி வருகிறார்கள்.. இந்த சம்பவங்களை நினைத்து, பொதுமக்களும் கதி கலங்கி போயிருக்கிறார்கள்.. இந்நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்த விசாரணையும் நடக்கிறது.
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கமலாப்புரா தாலுகா நரோனா பகுதியிலுள்ளது முரடி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர்கள் அம்பரீஷ், அஜய் .. இவர்கள் 2 பேருக்குமே 28 வயதாகிறது.. இருவருமே நண்பர்கள்.. இருவருமே தொழிலாளிகள்.. இருவருக்குமே திருமணம் முடிந்து, மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

தகாத உறவு
நெருங்கிய நண்பர்கள் என்பதால், அம்பரீஷ், அடிக்கடி அஜயின் வீட்டிற்கு சென்று வருவார்.. நாளடைவில் அஜயின் மனைவியுடன் அம்பரீஷூக்கு தகாத பழக்கம் ஏற்பட்டது... இதனால், கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில், அம்பரீஷூடன் உல்லாசமாக இருந்துள்ளார் அஜய்..
ஒருநாள் இந்த விஷயம், அஜய்க்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.. இதனால், மனைவியையும், அம்பரீஷையும் கண்டித்தார். இருவருமே அவரது பேச்சை கேட்கவில்லை.. நிம்மதியாக இருந்த தன்னுடைய குடும்பத்தை குலைத்த நண்பனை கொலை செய்ய முடிவு செய்தார் அஜய்.. இதற்காக நாளும் குறித்தார்..
மறைவிடத்தில் கொடூரம்
சம்பவத்தன்று இரவு, தனியாக பேசவேண்டும் என்று சொல்லி, அம்பரீஷை, கிராமத்துக்கு வெளியே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றார் அஜய்.. தன்னுடைய நெருங்கிய நண்பரையும் இருட்டு பகுதியில் மறைந்திருக்கும்படி கூறினார்.
அம்பரீஷூடன் மறைவிடத்துக்கு சென்றதுமே அஜய், தன்னுடைய மனைவியை விட்டுவிடும்படி கெஞ்சியுள்ளார்.. இதனால் நண்பர்களுக்குள் மீண்டும் தகராறு வெடித்தது.. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அஜய், தன்னுடைய நண்பருடன் சேர்ந்து, அம்பரீஷை கத்தியால் குத்தி கொலை செய்தார்... பிறகு, நண்பனை கொலை செய்தது குறித்து, நரோனா போலீசாருக்கு அஜயே தகவல் அளித்தார்.
தலைமறைவு நண்பர்
அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றதுமே, அவர்களிடம் அஜய் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து, அம்பரீஷின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
பிறகு அஜய்யிடம் நடத்திய விசாரணையில் மனைவியுடன் தகாத உறவை வைத்திருந்ததால்தான், நண்பனை கொன்றதாக வாக்குமூலம் தந்துள்ளார்.. ஆனால், கொலைக்கு உதவிய அஜயின் நண்பர் தலைமறைவாகிவிட்டதால், அவரை போலீசார் வலைவீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.
மண்டை தாக்கினார்
கடந்த வாரம் இதே கர்நாடகா மாநிலம், துமகூரு மாவட்டத்திலுள்ள கடசெட்டிஹள்ளி என்ற கிராமத்தில் இப்படியொரு கொடுமை நடந்தது.. சங்கரமூர்த்தி 52 வயது நபரின் மனைவி பெயர் சுமங்கலா. அங்குள்ள பெண்கள் விடுதியில் சமையல் வேலை செய்து சுமங்கலாவுக்கு நாகராஜூ என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதை சங்கரமூர்த்திக்கு கண்டிக்கவும், கணவரை போட்டுத்தள்ள சுமங்கலா முடிவு செய்தார்..
உடனே சங்கரமூர்த்தியின் கண்ணில் மிளகாய்பொடியை தூவினார். பிறகு கட்டையை எடுத்து கணவரின் மண்டையை தாக்கினார்.. பிறகு அவரது காலை தலைக்கு நேராக தூக்கி அழுத்தினார்... இதில் முதுகெலும்பு முறிந்து, இறந்தேவிட்டார் கணவர்..
தரையெல்லாம் மிளகாய் பொடி
பிறகு கள்ளக்காதலன் உதவியுடன் சங்கரமூர்த்தியின் சடலத்தை சாக்குப்பையில் கட்டி 30 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கிணற்றில் வீசிவிட்டார்கள்.. போலீசார் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான், தரையெல்லாம் மிளகாய் பொடி கிடந்தது... படுக்கையறையில் போர்வைகள் அலங்கோலமாக கிடந்தன
பிறகு சுமங்கலாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, மொத்த உண்மையையும் சொல்லிவிட்டார்.. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், இன்னொரு கள்ளக்காதல் கொலை கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications