சாவின் பயணம்! 10 நிமிசத்துல உணவு டெலிவரியா? ஸ்விக்கி, சொமாட்டோ மீது பொங்கிய கார்த்தி சிதம்பரம்
சென்னை: இந்தியாவில் ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்களில் பணிபுரியும் உணவு டெலிவரி ஊழியர்கள் 10 நிமிடங்களில் உணவை டெலிவரி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக உயிரை பணயம் வைப்பதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கடந்த மார்ச் 16 ஆம் தேதி மக்களவையில் சுவிக்கி, சொமாட்டோ உணவு டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கும் அவர் கடிதம் எழுதினார். அதில், "இந்தியாவில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இதுபோல் டெலிவரி ஊழியர்களாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பையும், நலத்திட்டங்களையும் நிறுவனங்கள் வழங்குவது இல்லை.

95.3% தொழிலாளர்களுக்கு காப்பீட்டு இல்லை
இதுபோன்ற நிறுவனங்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் டெலிவரி ஊழியர்களை தங்கள் நிறுவன ஊழியர்கள் என்று குறிப்பிடுவதுகூட இல்லை. இது தொடர்பாக 6 நகரங்களில் INDIAN FEDERATION OF APP BASED TRANSPORT WORKERS (IFAT) மற்றும் சர்வதேச போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு (ITF) இணைந்து நடத்திய ஆய்வில் 95.3% தொழிலாளர்களுக்கு விபத்து, மருத்துவக் காப்பீட்டு போன்றவை வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்
கொரோனா 2 வது அலையின்போது இந்த ஊழியர்களின் குடும்பத்தினர் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதில் முன்னணியில் உள்ள 2 நிறுவனங்கள் சிறந்த பணியிடங்களுக்கான தரவரிசையில் (FAIR WORKS INDIA RATINGS 2021-ல்) 10க்கு பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டுமே பெற்றுள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டும் இந்த 2 உணவு டெலிவரி நிறுவனங்கள் தரவரிசையில் கடைசி இடத்திலேயே இருந்தன.

அழுத்தம் கொடுக்கும் நிறுவனங்கள்
மேலும் டெலிவரி ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் குறிப்பிட்ட அளவு உணவு டெலிவரி செய்தாக வேண்டும் என்ற (TURN AROUND TIME-TAT) யை நிறுவனங்கள் நிர்ணயித்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், தினம் தினம் அவர்களுக்கு நேரும் சோகங்களின்போது இந்த நிறுவனங்கள் துணை நின்று உதவுவது இல்லை.

பாதுகாப்புக்கு நிதி ஒதுக்க வேண்டும்
மத்திய அரசு தனது சமூக பாதுகாப்பு குறியீட்டில் இதுபோன்ற உணவு டெலிவரி ஊழியர்களை "இருசக்கர வாகன தொழிலாளர்கள்" என்ற பெயருடன் இணைக்க வேண்டும். இவர்களை வைத்து வேலை வாங்கும் நிறுவனங்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 1-2% வரையோ அல்லது தங்கள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 5% வரையிலோ அவர்களின் சமூக பாதுகாப்புக்காக ஒதுக்க வேண்டும்.

தொழிலாளர் உரிமை, சலுகைகள் வழங்க வேண்டும்
அதேபோல் அந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், மகப்பேறு சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்க வெண்டும். இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளைபோல், அவர்களை தொழிலாளர்களாக அறிவிப்பதுடன் அவர்களின் கண்ணியத்தையும் காக்க வேண்டும். அத்துடன் டெலிவரி ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் குறிப்பிட்ட அளவு உணவு டெலிவரி செய்தாக வேண்டும் என்ற (TURN AROUND TIME-TAT) யை அரசு தடை செய்ய வேண்டும்." என அவர் கேட்டுக்கொண்டார்.

சாவின் பயணம்
இந்த நிலையில் இந்தியாவில் ஸ்விக்கி, சொமாட்டோ ஊழியர்கள் படும் கஷ்டங்களை சிறப்பு காணொலி தொகுப்பாக பிபிசி வெளியிட்டுள்ளது. அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கார்த்தி சிதம்பரம், "ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்களில் பணிபுரியும் உணவு டெலிவரி ஊழியர்கள் 10 நிமிடங்களில் உணவை டெலிவரி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக உயிரை பணயம் வைக்கின்றனர். இந்த மரண பயணத்தை நிறுத்த வேண்டும்." எனக் கோரியுள்ளார்.
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications