என்னை கட்சியிலிருந்து நீக்கணுமா? ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு வேடிக்கையா இருக்கு- கார்த்தி சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து என்னை நீக்க ஈவிகேஎஸ் இளங்கோவன் கோருவது வேடிக்கையாக இருக்கிறது. அவர் தனது நீண்ட அரசியல் பயணத்தில் பல ஏற்றத் தாழ்வுகளை பார்த்திருப்பவர். எனவே அவருடைய கருத்துக்கு நான் எந்த எதிர்கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனியார் தொலைகாட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கார்த்தி சிதம்பரம் மேலும் கூறியதாவது: ஜூலை 19 ஆம் தேதி புதுக்கோட்டையிலும் ஜூலை 20 ஆம் தேதி சிவகங்கையிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் நான் பேசினேன். அப்போது செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு இருந்தனர்.

evks elangovan karthi chidambaram congress

அப்போது யாருமே எதுவுமே சொல்லவில்லை, ஆனால் நான் பேசி ஒரு வாரம் கழித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ஏன் பேட்டி அளிக்கிறார் என தெரியவில்லை. நான் பேசியதை பார்த்துவிட்டு அவர் கருத்து தெரிவித்தாரா என்றும் தெரியவில்லை. இதுபோல் அவர் அவ்வப்போது செய்வார். நான் அதையெல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காகவே பேசினேன், காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்க வேண்டும் என நான் சொல்வது எந்த வகையில் கூட்டணியை பாதிக்கும். கூட்டணி கட்சி வலுவாக இருந்தால் தானே கூட்டணி வலுவாக இருக்கும். அப்படியிருக்கும் போது என்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றெல்லாம் இளங்கோவன் கூறியது வேடிக்கையாக உள்ளது. நான் பேசிய உரையை அவர் முழுமையாக கேட்கவில்லையோ என நினைக்க தோன்றுகிறது.

அவரை விமர்சனம் செய்ய நான் தயாராக இல்லை, நான் பேசியது சரியா தவறா என்பதை கட்சித் தொண்டர்களிடம் கேளுங்கள், கூட்டணி வேண்டாம் என பேசவில்லை, கூட்டணியால்தான் வெற்றி பெற்றேன் என்றுதான் பேசினேன். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு தமிழக லோக்சபா தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் வென்றது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டுக்கு பிறகாவது திமுக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு உரிய அங்கீகாரத்தை தர வேண்டும் என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் Vs கார்த்தி சிதம்பரம்! முழு உரையை கேட்டுட்டு பேசுங்கள்! சிவகங்கை எம்.பி. பதிலடி


இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: செல்வப்பெருந்தகையும் கார்த்தி சிதம்பரமும் கூட்டணிக்கு இடையே தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் வர போகிறது, அதில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டாமா? கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது என டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அதையும் மீறி ப.சிதம்பரத்திற்காக, கார்த்திக்கு சீட் கொடுத்தது காங்கிரஸ் தலைமை. இப்படியிருந்த நிலையில் சிவகங்கையில் லோக்சபா தேர்தலில் கார்த்தி சிதம்பரத்திற்காக எந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் வேலை செய்யவில்லை. முழுக்க முழுக்க திமுகவினர்தான் பணியாற்றினர்.

திமுக இல்லாவிட்டால் கார்த்தி சிதம்பரம் வென்றிருக்கவே முடியாது. இவ்வளவு ஏன் டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது. இப்போது தேர்தலில் ஜெயித்துவிட்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசிக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது எம்பியாகிவிட்டார். சவுகரியமாக டெல்லியில் அமர்ந்துவிட்டார்.

ஆனால் உள்ளாட்சி தேர்தல் இருக்கிறதே அதை மனதில் வைத்துக் கொண்டு கார்த்தி பேச வேண்டும். தேர்தலுக்கு முன்பு கார்த்தி இப்படி பேசியிருக்க வேண்டியதுதானே! அவருடைய பேச்சு தமிழ்நாடு காங்கிரஸுக்கு துரோகம் செய்யும் வகையில் இருக்கிறது என விமர்சித்துள்ளார்.

இதற்கு கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் தான் பேசிய வீடியோவை இணைத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு கருத்து சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். அந்த வீடியோவில் கூட்டணி கட்சியின் தயவினால் தான் நான் உட்பட அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றோம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

தமிழ்நாடு அரசு, முதலைமச்சரின் சிறப்பான திட்டங்கள் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதேநேரத்தில் கூட்டணியில் இருப்பதால் மக்கள் பிரச்சனையை பேசாமல் இருக்கும்போது, மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கான முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது.

இன்று காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் தான் இருக்கிறது. இதற்கு காரணம் மக்கள் பிரச்சனைகளை பேசாமல் விலகி இருப்பது தான். காங்கிரஸ் கட்சியை நோக்கி இளைஞர்களை புதியவர்களை வர வைக்க வேண்டும். அதற்கான செயல்களை தலைமை செய்ய வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு காங்கிரஸ் எதார்த்த அரசியல் களத்தில் இருக்காது என கார்த்தி சிதம்பரம் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+