ஈவிகேஎஸ் இளங்கோவன் Vs கார்த்தி சிதம்பரம்! முழு உரையை கேட்டுட்டு பேசுங்கள்! சிவகங்கை எம்.பி. பதிலடி
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக இல்லாவிட்டால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட் கூட வாங்கியிருக்க மாட்டார் என ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவும் மூத்த காங்கிரஸ் நிர்வாகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் செய்த நிலையில் தனது முழு உரையையும் கேட்டுவிட்டு கருத்து பதிவிடுமாறு சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 9 இடங்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்றது. இந்த நிலையில் அண்மையில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் புதிய தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், இனி கூட்டணியை எதிர்பார்த்து காங்கிரஸ் இருக்கக் கூடாது.

தமிழகத்தில் ஆண்ட கட்சி என்பதால் அந்த இடத்திற்கு மீண்டும் காங்கிரஸ் கட்சியை கொண்டு செல்ல அனைவரும் உழைக்க வேண்டும் என அண்மையில் பேசியிருந்தார். அதே மேடையிலேயே செல்வப்பெருந்தகையின் கருத்துக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆட்சேபனை தெரிவித்தார்.
அவர் பேசுகையில் இன்று 40-க்கு 40 வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திமுகவும் முதல்வர் ஸ்டாலினும்தான் என்பதை மறந்துவிடக் கூடாது. அன்று தனித்து போட்டியிட்ட போது கன்னியாகுமரியிலும் சிவகங்கையிலும் மட்டும்தான் ஒரு லட்சம் வாக்குகள் கிடைத்தன. ஆனால் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தோம் என பதில் அளித்திருந்தார்.
அது போல் புதுக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம் ஒரு விஷயத்தை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அவர் பேசுகையில், நாம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்தான் என்பதை மறுக்க முடியாது. அதை நாம் ஏற்க வேண்டும். அதே சமயத்தில் கூட்டணி கட்சி என்ற முறையில் நமக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. நமது வாக்கு வங்கி என்பது குறைந்துவிட்டது என்பதையும் மறுக்க மாட்டேன்.
எனினும் கூட்டணி கட்சி என்ற முறையில் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியும் இணைய வேண்டும் என்பதை போல் கார்த்தி சிதம்பரம் பேசியிருந்தார். இதற்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் பதிலடிக் கொடுத்துள்ளார். அவர் தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாது:
செல்வப்பெருந்தகையும் கார்த்தி சிதம்பரமும் கூட்டணிக்கு இடையே தேவையில்லாத பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள். உள்ளாட்சி தேர்தல் வர போகிறது, அதில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டாமா? கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது என டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் அதையும் மீறி ப.சிதம்பரத்திற்காக, கார்த்திக்கு சீட் கொடுத்தது காங்கிரஸ் தலைமை. இப்படியிருந்த நிலையில் சிவகங்கையில் லோக்சபா தேர்தலில் கார்த்தி சிதம்பரத்திற்காக எந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் வேலை செய்யவில்லை. முழுக்க முழுக்க திமுகவினர்தான் பணியாற்றினர்.
திமுக இல்லாவிட்டால் கார்த்தி சிதம்பரம் வென்றிருக்கவே முடியாது. இவ்வளவு ஏன் டெபாசிட் கூட பெற்றிருக்க முடியாது. இப்போது தேர்தலில் ஜெயித்துவிட்டு என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசிக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது எம்பியாகிவிட்டார். சவுகரியமாக டெல்லியில் அமர்ந்துவிட்டார்.
ஆனால் உள்ளாட்சி தேர்தல் இருக்கிறதே அதை மனதில் வைத்துக் கொண்டு கார்த்தி பேச வேண்டும். தேர்தலுக்கு முன்பு கார்த்தி இப்படி பேசியிருக்க வேண்டியதுதானே! அவருடைய பேச்சு தமிழ்நாடு காங்கிரஸுக்கு துரோகம் செய்யும் வகையில் இருக்கிறது என விமர்சித்துள்ளார்.
இதற்கு கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் தான் பேசிய வீடியோவை இணைத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு கருத்து சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். அந்த வீடியோவில் கூட்டணி கட்சியின் தயவினால் தான் நான் உட்பட அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றோம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
தமிழ்நாடு அரசு, முதலைமச்சரின் சிறப்பான திட்டங்கள் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதேநேரத்தில் கூட்டணியில் இருப்பதால் மக்கள் பிரச்சனையை பேசாமல் இருக்கும்போது, மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கான முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது.
இன்று காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் தான் இருக்கிறது. இதற்கு காரணம் மக்கள் பிரச்சனைகளை பேசாமல் விலகி இருப்பது தான் காரணம். காங்கிரஸ் கட்சியை நோக்கி இளைஞர்களை புதியவர்களை வர வைக்க வேண்டும். அதற்கான செயல்களை தலைமை செய்ய வேண்டும். இல்லையென்றால், தமிழ்நாடு காங்கிரஸ் எதார்த்த அரசியல் களத்தில் இருக்காது என கார்த்தி சிதம்பரம் பேசியிருக்கிறார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications