இது நியாயமே இல்லிங்க.. அதிமுக கூட்டணி முறிவு குறித்து பாஜகவின் கரு.நாகராஜன் வருத்தம்
சென்னை: பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறிய முரண்பாடுகளை கொண்டு இவ்வளவு பெரிய முடிவுகளை திட்டமிடுவது நியாமானது அல்ல என பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நகராஜன் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைமுகமாக பேசிய கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கள் ஏற்கெனவே இருந்த சலசலப்புகளை பஞ்சாயத்துக்களாக வெடிக்கச் செய்தது. அதிமுகவின் தலைவர்கள் அண்ணாமலை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினர்.

குறிப்பாக கடந்த 14ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த பின்னர் அண்ணாமலை மீதான விமர்சனங்கள் கூர்மையடைந்தன. ஏற்கெனவே அண்ணாமலை மீது பாஜக தலைமையிடம் அதிமுக ஏராளமான புகார்களை அளித்திருந்தது. இப்படி இருக்கையில், அண்ணா குறித்து அவர் பேசியதற்கு கூட பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டது. எனவேதான் அண்ணாமலை மீதான் விமர்சனங்கள் சூடுபிடித்தது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன.
இதனையடுத்து இது குறித்து இரு தினங்களுக்கு முன்னர் விரிவாக பேட்டியளித்த ஜெயக்குமார், "எங்களை பொறுத்த அளவில் கட்சியின் மறைந்த தலைவர்கள், மூத்த தலைவர்கள் குறித்த அவதூறாக பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவேதான் நாங்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். இது கட்சி முடிவு. கட்சி முடிவைதான் நான் அறிவிக்கிறேன்" என்று கூறினார்.
அதேபோல பாஜக மாநில தலைவரை மாற்றம் செய்தால் இந்த கூட்டணி இறுதியாகும்? நாடாளுமன்ற தேர்தலுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? என்று நிரூபர் எழுப்பிய கேள்விக்கு, "மறைந்த தலைவர்கள் குறித்து விமர்சிப்பதை தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடிவில்லை. இப்படியான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அவர்களோடு கூட்டணி தேவையா? என்று தொண்டர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். எனவே இந்த கூட்டணி தேவையில்லை என்பதுதான். தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்" என்று கூறியிருந்தார்.
இருப்பினும், எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக எதையும் கூறாத நிலையில், ஜெயக்குமார் கூறுவதை பெரியதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று பாஜக நிர்வாகிகள் கூறி வந்தனர். இந்த சூழலில்தான் இன்று அவசரமாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் பல்வேறு மாவட்ட செயலாளர்களும் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து 2 கோடிக்கும் அதிகமான தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும் மதிப்பளித்து பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தமிழக அரசியல் சூழலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், "சிறிய முரண்பாடுகளை கொண்டு இவ்வளவு பெரிய முடிவுகளை திட்டமிடுவது நியமானது அல்ல" என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது, "அதிமுகவின் கூட்டணி விலகல் தொடர்பாக தேசிய தலைமை என்ன முடிவெடுத்திருக்கிறதோ அதைத்தான் நாங்கள் தெரிவிக்க முடியும். அதுவரை நாங்கள் பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.
மதுரை மாநாட்டை பற்றி விமர்சித்ததாக கூறுகிறார். அப்படி அவர் விமர்சித்ததை நிரூபிக்க முடியுமா? அண்ணாவை பற்றி எங்கள் தலைவர் அண்ணாமலை எத்தனையோ முறை புகழ்ந்து பேசியிருக்கிறார். ஏதோ ஒரு வரலாற்று சம்பவங்களை சுட்டிக்காட்டும்போது அதில் ஏற்படுகிற சிறிய முரண்பாடுகளையெல்லாம் வைத்து இவ்வளவு பெரிய தேர்தலுக்கு அவர்கள் திட்டமிடுவது நியாயமானது அல்ல" என்று கூறியுள்ளார்.
-
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன்












Click it and Unblock the Notifications