அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி.. கர்நாடக முதல்வர் எடியூரப்பா புகழாரம்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் என்று புகழாரம் சூட்டினார், கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா.
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த தினத்தையொட்டி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரவீந்திரன், இன்று, ஏற்பாடு செய்திருந்த "முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்" என்ற பெயரிலான இணையவழி கருத்தரங்கிற்கு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா வீடியோ வடிவில் வாழ்த்து உரை அனுப்பியிருந்தார்.

அதில் எடியூரப்பா பேசுகையில், கருணாநிதிக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது. பெங்களூரில் மூடி வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை 2009ம் ஆண்டு எனது ஆட்சியின்போதுதான் திறந்து வைத்தேன். அந்த விழாவில் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி கலந்து கொண்டார். இருவரும் ஒரே மேடையில் விழாவில் பங்கேற்றோம்.
இரு மாநில மக்களிடையே உறவு பலம்பெற திருவள்ளுவர் சிலை திறப்பு விழா முக்கிய காரணமாக இருந்தது. சமுதாயத்தில் அடித்தட்டு மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி. இந்த பிறந்த நாள் விழாவில் அவரை நினைவு கூர்கிறேன். இவ்வாறு எடியூரப்பா தனது வாழ்த்து உரையில் தெரிவித்தார்.
-
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications