சென்னையில் திரளும் தலைவர்கள்.. கருணாநிதி நினைவு தினம்.. 7ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு நாளையொட்டி, ஆகஸ்ட் 7ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 முறை முதல்வராகவும், திமுக தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்தும், அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்டவர் மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி.

Karunanidhi Stalin Peace rally

நினைவிடம்: கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதி உடல்நலக்குறைவால் மறைந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்பகுதியில் நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் அவரது 6வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தில், கட்சியின் சார்பாக அமைதி பேரணி நடத்தப்பட்டு வருகிறது.. இந்த அமைதி பேரணியானது, சென்னை அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து திமுக தரப்பில் அஞ்சலி செலுத்தப்படும்.

அஞ்சலி: இதில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள், அஞ்சலி செலுத்த திரண்டு செல்வார்கள்.

அந்தவகையில், கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.. வரும் ஆகஸ்ட் 7-ம்தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியாக சென்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

அறிவிப்பு: ஓமந்தூரார் வளாகத்தில் கலைஞர் சிலை அருகிலிருந்து காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் நினைவிடம் வரை பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. பேரணியில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளனர்.

தமிழ்நாடு முழுக்க கலைஞர் சிலைகளுக்கும், உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதையடுத்து, திருவாரூரில் கருணாநிதி இல்லம், சென்னையில் மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதியில் அலங்கரிப்பு செய்யப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+