கருணாநிதிக்கு சிலை வைக்கனுமா? வேண்டாமா? என்ன விஜய் மாற்றி மாற்றி பேசுறீங்க! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: தஞ்சையில் நேற்று பேசிய விஜய், 'நிதி இல்லை நிதி இல்லை என சொல்லும் அரசு கருணாநிதிக்கு ஏன் சிலை வைக்க துடிக்கிறது" என திமுகவை விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் விஜய், முன்பு கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என்று பேசிய வீடியோவை பதிவிட்டு நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகிறார்கள்.
அன்று கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என பேசியிருந்த விஜய் தற்போது அரசியலுக்கு வந்ததும் அப்படியே மாற்றி பேசியிருப்பது அரசியல் ரீதியாகவும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

விஜய்யை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்
விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே திமுக திட்டுவதில் மட்டுமே கவனமாக இருந்து வருகிறார் எனவும், ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யவில்லை எனவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். தொண்டர்களை கட்டுப்படுத்த தெரியவில்லை, எதற்கும் கருத்து கூறாமல் மவுனமாக இருப்பது என விஜய்யை விமர்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக கரூர் சம்பவத்தின் போது அவரை பார்க்க வந்த 41 பேர் உயிரிழந்து கிடந்ததை பார்த்தும் பார்க்காதது போல் சென்னைக்கு ஓடிவிட்டார் என்றும் அவர்களது உறவினர்களையும் சென்னைக்கு அழைத்து ஆறுதல் கூறியதையும் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.
தஞ்சையில் விஜய் பேசியது
நேற்று தஞ்சையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்திற்கு வரும்போது கூட அவரது வாகனத்தை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஐசியூவிலும், ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போது உள்ளே ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றதையும் பார்க்க முடிந்தது. இதனையும் நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது கருணாநிதிக்கு சிலை வைப்பது தொடர்பாக விஜய் பேசியதையும் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கியுள்ளனர். அதாவது தஞ்சையில் நேற்று பேசிய விஜய், "டவுன் சவுத்தில் ஒரு ஊரில் கலைஞர் அவர்களுக்கு ஒரு வெண்கல சிலை வைக்க வேண்டும் என முயற்சி செய்தீர்கள் அல்லவா.. அதற்கு சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னாங்க.. மக்களுடைய பணத்தில் யாருக்கு புகழ் பாட நினைக்கிறீங்க என்று கேட்டாங்க அல்லவா?..
ஊரான் வீட்டு நெய்யில்..
இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? "ஊரான் வீட்டு நெய்யில.. உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க.." மக்களுக்கு நல்லது செய்யுங்க.. அவர்களுடைய அடிப்படை வாழ்வாதாராத்திற்கு எதாவது கேட்டால் நிதிச்சுமை.. நிதி இல்லை.. நிதி இல்லை என சொல்றீங்க.. ஆனால் சிலை வைக்க மட்டும் எங்க இருந்து சார் காசு வருது?" என்று பேசியிருந்தார்.
முன்பு விஜய் பேசியது என்ன?
விஜய் தஞ்சையில் இப்படி பேசியதற்கு அவர் பழைய வீடியோவை பதிவிட்டு நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்து வருகிறார்கள். முன்பு விஜய் பேசுகையில், "கலைஞர் நகர் என பெயர் வைப்பது மட்டும் பத்தாது.. அந்த இடத்தில் கலைஞர் அவர்களுக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். அவருடைய 100-வது வயதில் இதேபோன்று ஒரு பங்ஷன் செய்து அவரோடு சேர்ந்து அந்த சிலையை நானும் ரசிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.." என்று கூறியிருந்தார்.
கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. இதனை பதிவிட்டுள்ள நெட்டிசன்கள் இப்போது கலைஞருக்கு சிலை வைக்க வேண்டுமா? வேண்டாமா? என கேள்வி எழுப்பி உள்ளனர். ஒரு சிலர் அரசியலுக்கு வந்ததும் அப்படியே பல்டி அடித்து பேசுகிறார் எனவும் விஜய்யை விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.
-
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
பல்கலைக்கழக வேந்தராக மீண்டும் ஆளுநர்? முதலமைச்சர் வேண்டாமா? அமைச்சர் கூறியது என்ன? -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம் -
அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்!












Click it and Unblock the Notifications