சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடே பின்பற்றிய கருணாநிதியின் “மாஸ்” திட்டம்.. லோக்சபாவில் "திராவிட மாடல்" பாடமெடுத்த திமுக எம்பி

Google Oneindia Tamil News

சென்னை: கிராமங்களில் நிலவுடமையாளர்களை சார்ந்து இருந்த 90% மக்களுக்கு 255 நாட்கள் உணவு வழங்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த நுகர்பொருள் வாணிப கழக திட்டமே நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டதாக திமுக எம்பி செந்தில்குமார் லோக்சபாவில் தெரிவித்து உள்ளார்.

Recommended Video

    திமுக எம்பி செந்தில்குமார் Lok Sabha Speech - 01/08/2022

    கடந்த வாரம் தொடங்கிய மழைக்கால கூட்டத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக நாடாளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் தொடர்ந்து அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வந்தன.

    கனிமொழியை பேசவே விடல.. சுப்ரியாவுக்கு வந்த ஆத்திரம்.. தயாநிதி மாறனின் சிரிப்பு.. தடதடத்த அவைகனிமொழியை பேசவே விடல.. சுப்ரியாவுக்கு வந்த ஆத்திரம்.. தயாநிதி மாறனின் சிரிப்பு.. தடதடத்த அவை

    விலைவாசி உயர்வு

    விலைவாசி உயர்வு

    இந்த நிலையில் இன்று லோக்சபாவில் இன்று விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில் திமுக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மத்திய அரசையும், அதன் பொருளாதார கொள்கைகளையும், ஜி.எஸ்.டி. வரி உயர்வையும் கடுமையாக விமர்சித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

    திமுக எம்.பி. செந்தில்குமார்

    திமுக எம்.பி. செந்தில்குமார்

    இந்த கூட்டத்தில் தருமபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமாரும் பேசுகையில், "தமிழ்நாட்டில் கடந்த 1967 ஆம் ஆண்டு திமுக முதன்முதலில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் விவசாய நிலங்கள் 10% நில உடமைதாரர்களிடமே இருந்தன. 90% மக்கள் நில உடமையாளர்களிடம் கூலித் தொழிலாளிகளாக இருந்தார்கள்.

     கருணாநிதியின் திட்டம்

    கருணாநிதியின் திட்டம்

    ஒரு ஆண்டுக்கு அவர்களுக்கு 110 நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும். மீதமுள்ள நாட்களில் அவர்களுக்கு உணவு போன்ற அத்தியாசிய பொருட்கள் ஏதும் கிடைக்காது. நாடு முழுவதும் இந்த நிலை இருந்தபோது முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதை மாற்ற முயன்றார். மீதமுள்ள 255 நாட்களும் அவர்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தை கொண்டு வந்தார்.

    திராவிட மாடல்

    திராவிட மாடல்

    இதுதான் சுயமரியாதை இயக்கம். இதனால் நில உடமையாளர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாடு நுகர்பொருள் வானிபக் கழகம் கொண்டு வந்தார். தமிழ்நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம்தான் பின்னர் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டது. இதுதான் திராவிட மாடல் கொள்கைகள் செய்த சாதனை. அதன்மூலமாக சமத்துவமும், சுயமரியாதையும் ஏற்பட்டது.

    English summary
    Karunanithi introduced civil supplies department - DMK MP Senthilkumar speech in Loksabha:
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X