விஜய் ரூ 200 கோடி விட்டுட்டு 2 லட்சம் கோடி ரூபாயை அள்ள அரசியலுக்கு வந்துட்டாரு! கருணாஸ் விமர்சனம்!
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். "விஜய் எந்த நோக்கத்துடன் அரசியலுக்குள் வருகிறார் என்பதை எல்லோரும் கவனிக்க வேண்டும். சினிமாவில் 200 கோடி ரூபாய் இழந்த அவர், அரசியலில் 2 லட்சம் கோடி ரூபாய் சம்பாதிக்கவே வருகிறார்," என்று கருணாஸ் கூறினார்.

இதுகுறித்து கருணாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: "கடல் தாமரை வந்தால் குளம், படர் தாமரை வந்தால் உடல் நாசமாகும். அதுபோல, தாமரை (பாஜக) வந்தால் தமிழ்நாடே நாசமாகிவிடும்," என விஜய் அரசியலுக்கு வருவதை ஒப்பிட்டு கருணாஸ் எச்சரித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியைப் பாராட்டிய கருணாஸ், "இந்தியாவுக்கே சிறந்த முதலமைச்சர் ஸ்டாலின்" என்றார். மக்களின் நலனுக்காகச் சிந்தித்து, தினமும் திட்டங்களைச் செயல்படுத்தும் முதலமைச்சர்தான் நமக்குத் தேவை. ஸ்டாலின் அதற்கு முழுமையாகப் பொருத்தமானவர் என்றும் அவர் அழுத்தமாகச் சொன்னார்.
மக்களுக்காகத் தியாகம் செய்யும் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதியும் இருப்பதால், தமிழ்நாட்டின் உரிமைகள், பாதுகாப்பு, மாநில சுயாட்சி ஆகியவை சட்டப்படி பாதுகாக்கப்படும் என்பதை மக்கள் உணர வேண்டும். ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்பது தன் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரின் விருப்பமும் கூட என்று கருணாஸ் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியை கடுமையாகத் தாக்கிப் பேசிய கருணாஸ், "எடப்பாடியின் அரசியல் கதை முடிந்தது. என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் ஜெயலலிதாதான், எடப்பாடியோ, டிடிவியோ அல்ல. ஜெயலலிதா எனக்கு தேர்தலில் வாய்ப்பு கொடுத்தார், நான் வெற்றி பெற்றேன். அவர் மறைந்த பிறகு நான் அரசியலில் இருந்து விலகிவிட்டேன்," என்றார்.
"மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என ஜெயலலிதா ஒருமுறை உறுதிமொழி எடுத்தார். ஆனால், எடப்பாடி தனது நான்கரை ஆண்டு ஆட்சிக்காலத்தில், தனது பதவியைக் காப்பாற்றவும், பணம் சம்பாதிக்கவும், தனது சமூகத்தைப் பாதுகாக்கவும் கட்சியையும் ஆட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்," என்றும் கருணாஸ் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications