விஜய் கரூர் பிரச்சார வீடியோக்களை கொடுங்க.. சிடிஆர் நிர்மல்குமாருக்கு போலீசார் நோட்டீஸ்!
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சார வீடியோக்களை அளிக்குமாறு தவெக இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு கரூர் காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. விஜய்யின் பிரச்சார வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உள்ளிட்டவற்றை அளிக்குமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த 27 ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மிகக் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு மொத்தம் 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு ரூ. 10 லட்சமும், மத்திய அரசு ரூ. 2 லட்சமும், தவெக தரப்பில் இருந்து ரூ. 20 லட்சமும் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.

கரூர் கோரச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரச் செயலாளர் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் வரும் 14ஆம் தேதி சிறையில் அடைக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூர் துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தங்களை கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், விஜய் கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமாருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கேட்டு கரூர் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
விஜய் தனி கேமராமேன் எடுத்த காட்சிகள், விஜய்யின் பிரச்சார பேருந்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளையும் கரூர் போலீசார் கேட்டுள்ளனர். சென்னை சேலையூரில் உள்ள இல்லத்திற்கு சென்ற போலீசார், சிடிஆர் நிர்மல்குமாரின் உதவியாளரிடம் நோட்டீஸை வழங்கிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து? மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது












Click it and Unblock the Notifications