ஆதவ் அர்ஜுனா கைதாகிறாரா? சென்னையில் உள்ள வீட்டுக்கு சென்ற கரூர் போலீஸ்.. கடிதத்தில் இருப்பது என்ன?
சென்னை: சென்னையில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு கரூர் போலீசார் வருகை தந்துள்ளனர். போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்த கரூர் போலீசார், கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கேட்டு கடிதம் அளித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் பரப்புரை கூட்டம் கடந்த சனிக்கிழமை நடந்தது. இந்த கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் எப்படி நடந்தது என்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீஷன் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா வன்முறையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு அதை நீக்கியிருந்தார். இந்த பதிவு தொடர்பாகவும் ஆதவ் அர்ஜுனா மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆதவ் அர்ஜுனா சென்னை போயஸ் கார்டன் வீட்டில் தான் இருந்து வருகிறார். நேற்று கூட செய்தியாளர்களை சந்தித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று அவரது இல்லத்திற்கு போலீசார் வருகை தந்துள்ளனர். கருர் போலீசார் ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு வருகை தந்தனர். அப்போது ஒரு கடிதம் ஒன்றை அவரிடம் கொடுத்துள்ளனர். அந்த கடிதத்தில் தவெக ஐடி விங் பிரிவு கரூர் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கொடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது கரூர் பரப்புரை சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கொடுக்குமாறு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதவ் அர்ஜுனா வீட்டிற்கு போலீஸ் வந்தது தவெகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
Z பாதுகாப்பை கூட நம்ப மாட்டார்? விஜய் நம்பும் ஒரே ஆள் நயீம் மூஸா! முதல்வரின் இடது கை! யார் இவர்? -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
நேர்மையாக செயல்படுங்கள்.. இல்லைன்னா தொலைச்சிடுவேன்! நகராட்சி அதிகாரிகளுக்கு விஜய் எச்சரிக்கை -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன?












Click it and Unblock the Notifications