மன்னிப்பு கேட்பவனே பெரிய மனுஷன்.. விஜய்யின் வீடியோ வெறும் நடிப்புதான்.. எஸ்வி சேகர் விமர்சனம்!
சென்னை: கரூர் பெருந்துயரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் மன்னிப்பு கோராதது தொடர்பாக நடிகரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான எஸ்வி சேகர் விமர்சித்துள்ளார். மன்னிப்பு கேட்பவனே பெரிய மனுஷன் என்று கூறிய எஸ்வி சேகர், அரசியலின் முதல் பாடத்தை விஜய் மிகப்பெரிய விலையைக் கொடுத்து கற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வருத்தமோ, மன்னிப்போ கேட்கவில்லை. நேற்று வெளியிட்ட வீடியோவில் கூட விஜய், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது.. கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். ஆனால் கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மைகளும் நன்றாக தெரியும். அவர்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கரூரை சேர்ந்த மக்கள் உண்மையை சொல்லும் போது, எனக்கு கடவுளே வந்து உண்மையை கூறியது போல் இருந்தது. விரைவில் எல்லா உண்மைகளும் தெரிய வரும் என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இரங்கல் கூட்டத்தை கூட விஜய் அறிவிக்கவில்லை. உயிரிழந்தவர்களின் இறுதிசடங்குகளில் கூட தவெகவின் பங்கேற்கவில்லை.
இது சாமானிய மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான எஸ்வி சேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கரூரில் 41 பேர் உயிரிழந்த பின், 3 நாட்களுக்கு பின் வருத்தமான முகத்துடன் விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று விஜய் உருக்கமாக பேசிய வீடியோவை நடிப்பாகவே பார்க்க வேண்டியதாக உள்ளது.
ஏனென்றால் ஒரு கூட்டம் மட்டுமே ஓட்டாக மாறிவிடும் என்ற தவறான கருத்தில் தான் கூட்டம் கூட்டப்பட்டது. ரோடு ஷோ நடத்தக் கூடாது என்று போலீசாரிடம் எழுதிக் கொடுத்த பின்னரும், ரோடு ஷோ நடத்தி இருக்கிறார்கள். 10 ஆயிரம் வருவார்கள் என்று எழுதி கொடுத்துவிட்டு 25 ஆயிரம் பேர் வந்தால், தவெக கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். கூட்டத்தை கட்டுப்படுத்த தெரிந்தவர்கள் தான் தலைவராக வர முடியும்.
எதற்கெடுத்தாலும் போலீஸ் செய்ய வேண்டுமென்றால், அவர்களுக்கு தவெக ஒத்துழைப்பு கொடுத்திருக்கும். எல்லாவற்றையும் அரசு மீது குற்றம்சாட்டிவிட்டு, தப்பிக்க முயல்வது கண்டனத்திற்குரிய குற்றம். தன்னை பார்க்க வந்தவர்கள் உயிரிழந்துவிட்டார்கள் என்று தெரிந்த பின், அவசரமாக சென்னை திரும்பி இருக்கக் கூடாது. அரசு செய்ய வேண்டிய கடமையை செய்த பின், தப்பிப்பதற்காக அரசு மீது குற்றம் சுமத்தக் கூடாது.
யாரையும் குற்றம் சொல்லவில்லை. அரசியலின் முதல் பாடத்தை மிகப்பெரிய விலைக் கொடுத்து விஜய் வாங்கியுள்ளார். இந்த விவகாரத்தில் மற்றவர்களை குற்றம் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. மன்னிப்பு கேட்க தெரிந்தவன் தான் பெரிய மனுஷன்.. குழந்தைகளை இழந்தவர்களிடம் என்ன ஆறுதல் கூறப் போகிறீர்கள்? ரூ.25 லட்சம் கொடுத்தால், 10 வயது குழந்தையை உங்களால் கொடுக்க முடியுமா?
நடிகனை பார்க்க கூட்டம் வரும் தான். விஜய் அவரின் வாழ்க்கையில் என்ன செய்திருக்கார் என்பதை பார்க்க வேண்டும். நல்ல மனிதன் என்ற பெயரை விஜய் எடுக்க வேண்டும். சிஎம் சார்.. என்னை கைது செய்யுங்கள் என்கிறார்.. முதல்வர் நிச்சயமாக விஜய்யை கைது செய்ய மாட்டார்.. அரசியலில் 6வது முறையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் திமுகவை எதிர்த்து விஜய் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
-
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை.. விடிவுகாலம் எப்போது? அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன குட் நியூஸ்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி










Click it and Unblock the Notifications