மனித நேயமற்ற ரசிகர் வெறியர்கள்.. மரண ஓலங்களின் போதும் Conspiracy theory.. மதிவதனி போட்ட பதிவு!
சென்னை: சினிமா வெறியில் மரண ஓலங்களின் போதும் 'conspiracy theory' எழுதி கொண்டிருக்கும் மனித நேயமற்ற ரசிக வெறியர்கள் உருவாகி இருப்பது சற்று பயத்தை கொடுப்பதாக திராவிடர் கழக இணை பொதுச்செயலாளர் மதிவதனி தெரிவித்துள்ளார். நாம் அனைவரும் நினைத்து பார்ப்பதைவிட கொடூரமான கும்பல் மனப்பான்மை உருவாகி இருப்பதாக கூறியுள்ள அவர், தனிமனித பண்பும் இல்லாமல் வளரும் தலைமுறையை பற்றி பேசும் இடங்களில் எல்லாம் வேதனை அடைந்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தால், மக்கள் பலரும் சோகம் அடைந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை ஆணையம் இன்று பிற்பகல் முதலே விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனிடையே கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து தவெகவை தவிர்த்து மற்ற அத்தனை அரசியல் கட்சிகளும் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். அதேபோல் தமிழக அரசு தரப்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தரப்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிதி உதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடந்து வருகிறது. தவெக தரப்பு திமுகவை கடுமையாக சாடி வருகிறது. அதேபோல் திமுக தரப்பில் இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் திராவிடர் கழகம் துணை பொதுச்செயலாளர் மதிவதனி தனது எக்ஸ் பக்கத்தில், ஒருவரை தெரியாமல் இடித்து விட்டாலே, நம்மை அறியாமல் பதறி மன்னிச்சுடுங்க என்னாச்சு என்று கேட்கும் பழக்கம் எல்லாம் மாறி கும்பலாக ஓடி, ஒருவர் முன் ஒருவர் முந்திக் கொண்டு ஓடி, தங்கள் கண் முன்னே ஒருவர் விழுவதை பார்த்தும் நடிகரை பார்க்க ஓடுவது எல்லாம் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலை.
சினிமா வெறியில் மரண ஓலங்களின் போதும் 'conspiracy theory' எழுதி கொண்டிருக்கும் மனித நேயமற்ற ரசிக வெறியர்கள் உருவாகி இருப்பது சற்று பயத்தை கொடுக்கிறது. இந்த தனிமனித பண்பும் இல்லாமல் வளரும் தலைமுறையை பற்றி பேசும் இடங்களில் எல்லாம் வேதனை அடைந்திருக்கிறோம். ஆனால் நாம் அனைவரும் நினைத்து பார்ப்பதைவிட கொடூரமான கும்பல் மனப்பான்மை உருவாகி இருக்கிறது.
மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும் என்று தெரியும். ஆனால் இத்தனை மரணங்கள், அதன் பின்பும் திருந்த மனம் இல்லாத மனங்களை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார். மதிவதனியின் பதிவு திமுக மட்டுமல்லாமல் நடுநிலையாளர்கள் வட்டாரத்தில் பேசுபொருளாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications