ஓட்டு போடுங்கள்! பிஞ்சுப்பூக்களான குழந்தைகளை பலியாக்காதீர்கள்! கரூர் குறித்து பார்த்திபன் வேதனை
சென்னை: ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால்
கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க!அதிலும்
இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்! என கரூர் சம்பவம் குறித்து ஆர்.பார்த்திபன் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'கூட்டம்' என்ற ஒற்றை வார்த்தைக்கு பின்....
10,100,1000,1000000000000000000000 போன்ற பூஜ்ய உயிர்களின் அன்பும், பாசமும், தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும், வலியும், வேதனையும் முடிவில் கேள்விக் கேட்பாறற்ற பிணங்களாய் வெள்ளை போர்த்தி, வண்ண மாலை சாத்தி, (இருந்தால்) உறவினர்களின் கண்ணீர் ஆற்றில் கரைக்கச் சொல்லி
'கொடுத்து வைத்தவர்கள்'
ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால்
கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க!அதிலும்
இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்! என இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
அது போல் அவர் முன்னதாக கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் (ட்வீட் போட்ட நேரத்தில் 31 பேர் பலி, தற்போது 39 பேர் பலி)குடும்பங்களுக்கு யார் எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. இன்னும் சிகிச்சையில் இருக்கும் 58 பேரும் விரைந்து குணமடைய அனைவரும் வேண்டிக் கொள்வோம் என்றும் ட்வீட் போட்டிருந்தார்.
ஜிவி பிரகாஷ் ட்வீட்
பார்த்திபனை போல் சமூக அவலங்களுக்கு குரல் கொடுக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சூரி துயரம்
நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறையவைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியும் அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம். மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் இறைவன் கருணையால் விரைவில் முழு நலம் பெற வேண்டுகிறோம். இந்த வேதனை நிறைந்த தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்து, மனதாலும் செயலாலும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். எனது ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விஷால் வேதனை
அது போல் நடிகர் விஷாலும் கொந்தளிப்புடன் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் சுத்த முட்டாள்தனம். நடிகர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு வந்திருந்த குழந்தைகள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது இதயத்தை நொறுக்குகிறது. இது முற்றிலும் தவறானது. இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தையாவது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இனியாவது இது போன்ற கூட்டங்களுக்கு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது, 22 பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications