காசிமேடு பீச்சா இது? சர்வதேச தரத்திற்கு மாறுதே.. சென்னையின் புதிய "லைம் லைட்".. போட்டோவை பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் காசிமேடு கடற்கரை பகுதியை சுற்றுலாதளமாக மாற்ற உள்ளனர். அங்கே புதிய காசிமேடு பீச் எப்படி இருக்கும் என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

சென்னையில் பயன்படுத்தப்படாத பல்வேறு பீச்களும் கூட இருக்கின்றன. வெறும் கடற்கரைகளாக, குப்பை கொட்டும் இடங்களாக, மீனவர்கள் மட்டும் செல்லும் இடங்களாக பல்வேறு பகுதிகள் இருக்கின்றன. இந்த பகுதிகளை சரி செய்து, சரியாக பயன்படுத்த தொடங்கினால் மக்கள் வரத்து இங்கே அதிகம் ஆகும். அதேபோல் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் அதிகம் ஆகும். அதன்படி காசிமேடு பகுதியில் மக்கள் பயன்பாடு இன்றி இருக்கும் கடற்கரை பகுதியை சுத்தம் செய்ய உள்ளனர்.

Kasimedu beach going to get a brand new look: This renders will make you wonder about Chennai

கடற்கரை சுத்தம்: வரும் நாட்களில் காசிமேடு மற்றும் திருவொற்றியூர் பாரதி நகர் இடையே உள்ள பகுதியை சுத்தம் செய்து, அதை அழகுபடுத்த உள்ளனர். அதன்பின் இதை மக்கள் பயன்படுத்தும் வகையில் சுற்றுலா பீச்சாக மாற்ற உள்ளனர். இங்கே தற்போது பழைய படகுகள் மட்டுமே நிறுத்தப்பட்டு உள்ளன. இங்கே நடைமேடை அமைப்பது, மண் பகுதியை சுத்தம் செய்வது, விளக்குகளை போடுவது, அலங்கார அமைப்புகளை ஏற்படுத்துவது போன்ற மாற்றங்களை செய்ய உள்ளனர். இதன் மூலம் மக்கள் பயன்படுத்தும் புதிய பீச்சாக இது உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

Kasimedu beach going to get a brand new look: This renders will make you wonder about Chennai

காசிமேடு சாட்டிலைட் பீச்: இங்கே இருக்கும் குப்பைகளை அகற்றி, பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கும் பகுதிகளை புனரமைத்து வருகிறது. அதாவது நொச்சி குப்பம், டோம்மிங் குப்பம் பகுதியில் இருக்கும் மெரினாவில் வடக்கு பகுதியைத்தான் சுத்தம் செய்து வருகின்றனர். மெரினா மெயின் கடற்கரைக்கு கொடுக்கப்படும் கவனிப்பு முன்பெல்லாம் இந்த பகுதிக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. இந்த இடம்தான் தற்போது சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

Kasimedu beach going to get a brand new look: This renders will make you wonder about Chennai

அதோடு இங்கே வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் செல்ல வசதிகளை ஏற்படுத்துவது என்பது போன்ற பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த பகுதியைத்தான் துணை பீச்.. அதாவது சாட்டிலைட் பீச் என்று அழைக்க உள்ளனர். காசிமேடு பீச்சில் பெசன்ட் நகரில் இருப்பது போல புதிய புட் கோர்ட், மக்கள் நடப்பதற்கான பிளாசா, புதிய அலங்கார அமைப்புகள் ஆகியவை உருவாக்கப்பட உள்ளன. இதற்கான புகைப்படங்கள்தான் தற்போது வெளியாகி உள்ளன.

Kasimedu beach going to get a brand new look: This renders will make you wonder about Chennai

சென்னை பீச்சுகள் முக்கியம்: சென்னையில் எலியட்ஸ் பீச், மெரினா பீச், திருவான்மியூர் பீச் என்று சென்னையில் பல்வேறு பீச்கள் இருக்கின்றன. சென்னை மெரீனாவை சர்வதேச தரத்திற்கு மாற்றுவதற்கான பல்வேறு பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. முக்கியமாக இங்கே பல புதிய சுற்றுலா அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன, சென்னையின் அடையாளங்களில் ஒன்று மெரினா பீச். உலகின் இரண்டாவது பெரிய பீச்.

Kasimedu beach going to get a brand new look: This renders will make you wonder about Chennai

இந்தியாவின் மிகப்பெரிய பீச்தான் சென்னை மெரினா பீச். மொத்தமாக 12 கிமீ நீளம் கொண்ட இயற்கையான கடற்கரை இது. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் லைட் ஹவுஸ் தொடங்கி அண்ணா சதுக்கம் வரை இருக்கும் சாலையில் பல அலங்கார அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

பீச்: இது போக சென்னை மெரினா பீச்சில் இருந்து கோவளம் வரை இருக்கும் பகுதி முழுக்க புனரமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு கட்டமாக காசிமேடு பீச்சில் புதிய சுற்றுலா தளங்களை அமைப்பது, வாட்டர் விளையாட்டுகளை ஏற்படுத்துவது, மீனவர்களுக்காக ஜெட் போட்டுகளை வழங்குவது. புதிய பூங்காக்கங்களை ஏற்படுத்துவது. அதேபோல் வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் செல்ல வசதிகளை ஏற்படுத்துவது என்பது போன்ற பணிகளை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. காசிமேடு சாட்டிலைட் பீச்சை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மெரினா பீச்சில் இணைப்பு சாலை பகுதியில் இருக்கும் பயன்படுத்தப்படாத பகுதிகளை தற்போது சென்னை பெருநகர மாநகராட்சி கழகம் சுத்தம் செய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+