எஸ்.சி. பட்டியலில் அவங்களை கொண்டு வந்துடலாமா? கஸ்தூரியெல்லாம் அரசியல் பேசினால் எப்படி? பிரபலம் நறுக்
சென்னை: "பார்ப்பனர் + பார்ப்பனரல்லாதோருக்கான பிரச்சனை என்பது இங்கே 4000 வருஷமாக இருக்குது.. தமிழர்கள்தான், அன்று தெலுங்கர்களாக மாற்றப்பட்டார்கள்.. தெலுங்கு மொழியே தமிழிலிருந்துதான் பிறந்தது" என்று நடிகை கஸ்தூரியின் கருத்துக்கு, மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பதிலடி தந்துள்ளார்.
Kingwoods News என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், பிசிஆர் சட்டம் குறித்த பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார்.. அத்துடன், விஜய், கஸ்தூரியின் அரசியல் பற்றியும் விமர்சித்திருக்கிறார். அதன் சுருக்கம்தான் இது:

"ராமகிருஷ்ணா மடமானது, பல லட்சம் தந்து தமிழர்களை காட்டி தருவதற்காக ஏவப்பட்ட தமிழ் துரோகிதான் அர்ஜுன் சம்பத்.. இவங்களையெல்லாம் சங்கராச்சாரியார் கிட்ட சேர்க்கிறதே இல்லை. அதனால், மடங்களில் மட்டும்தான் பல லட்சம் விலைபோகிறது.. அர்ஜுன் சம்பத்தின் தகுதியும் அவ்வளவுதான்.
பிசிஆர் சட்டம்: பார்ப்பனர்களை பிசிஆர் சட்டத்தில் போட வேண்டும் என்கிறார்களே, அப்படியானால், எஸ்.சி கோட்டா கொண்டு வரட்டுமே.. பிசிஆர் சட்டம் யாருக்காக? எஸ்சி., எஸ்.டி-க்காகத்தானே? அப்படியானால், எஸ்சி பட்டியலில் இவர்களை கொண்டு வந்ததுமே, பிசிஆர் ஆக்ட்டில் போட்டுடலாம்.
ஆர்எஸ்எஸ்ஸில் ஒரு பிரிவானது, தமிழர், ஈழ பிரச்சனையை, தமிழ் தேசிய அரசியலை எதிர்க்கக்கூடிய நபராக, சில பல லட்சங்களை தந்து உருவாக்கி, சில நூறுபேரு கொண்ட, ஒரு குழுவின் தலைவரே அர்ஜுன் சம்பத் ஆவார்.. ஜனாதிபதி அலுவலகம், ராணுவ துறையில், பொருளாதார துறையில், ரிசர்வ் வங்கியில், இந்த 3 சதவீதம் பேர் தான் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள்.
சங்கராச்சாரியார்: தங்களை பற்றி ஏதாவது பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதால்தான், அர்ஜுன் சம்பத் போன்றோர்கள் எதையாது பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.. சங்கராச்சாரியாருக்கு இணையாக சுப்பிரமணிய சாமி சேரில் உட்கார்ந்து பேசறாரு.. ஆனால், மாநில ஆளுநர் தமிழிசையை தரையில் உட்கார வெக்கறாங்க.. மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனையும் தரையில்தான் உட்கார வெக்கறாங்க.. ஜெயலலிதாவையும் கீழே உட்கார வைத்ததாலேதானே பிரச்சனை?
பார்ப்பனர் + பார்ப்பனரல்லாதோருக்கான பிரச்சனை என்பது இங்கே 4000 வருஷமாக இருக்குது.. தமிழர்கள்தான், அன்று தெலுங்கர்களாக மாற்றப்பட்டார்கள்.. தெலுங்கு மொழியே தமிழிலிருந்துதான் பிறந்தது.. தமிழும், சமஸ்கிருதமும் ஒன்றாக கலந்து உருவாக்கப்பட்டதுதான் தெலுங்கு மொழியாகும். இது எப்படி கஸ்தூரிக்கு தெரியாமல் போச்சு?
கஸ்தூரி வீடு: அடையாரில் கஸ்தூரியின் 100 கோடி ரூபாய் வீடு இருக்கு.. அந்த வீடு இதற்கு முன்பு யார் பெயரில் இருந்தது? அஸ்வின் முத்தையா யார்? இதையெல்லாம் பேசவேண்டி வரும்.
கஸ்தூரியை பார்த்து எல்லாரும் பயப்பட ஆரம்பிச்சிட்டாங்க.. கஸ்தூரி வாயை அடக்கி கொள்வது நல்லது.. கஸ்தூரியெல்லாம் அரசியல் பேசினால் எப்படி? கஸ்தூரியெல்லாம் நமக்கு அரசியல் சொல்லித்தரும் அளவுக்கு நிலைமை சீரழிந்து கிடக்கிறது..
விக்ரவாண்டி: பெற்ற தாய்க்கு கோயில் கட்டாத தமிழன், குஷ்புவுக்கு கோயில் கட்டி பூஜை செய்யறான்.. விக்ரவாண்டியில் போய் சேர்ந்த கூட்டம் எல்லாம் அறிவே இல்லாத கூட்டம்.. இவங்கெல்லாம் குஷ்புவுக்கு கோயில் கட்டின கூட்டம்தான்..
அர்ஜூன் ரெட்டி, உதயநிதி, விஜய், இந்த லிஸ்ட்டில் இப்போது கஸ்தூரியும் சேர்ந்தாச்சு.. தமிழர்களுக்கு பல்வேறு வரலாறுகள் உள்ளன. ஆனால், இப்போது இவர்கள் எல்லாம்தான் தமிழகத்தின் இளம் சந்திதியினருக்கு வழிகாட்டிகள் போல.. இதே நிலை நீடித்தால், இன்னும் பல கஸ்தூரிகள் இனிமேல் வருவார்கள்" என்று தெரிவித்துள்ளர்.












Click it and Unblock the Notifications