3 நாளாக சீமான் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் என்ன தெரியுமா? பிரஸ் மீட்டில் கோர்த்துவிட்ட மனைவி கயல்விழி!
சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக சென்னை போலீசில் இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார்.
சீமான் , மனைவி கயல்விழியுடன் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அதன் பின்னர் செய்தியாளர்களை மனைவி கயல்விழியுடன் சந்தித்தார் சீமான்.

இந்த சந்திப்பின் போது தொடக்கம் முதலே படு சீரியசாகவே பேசிக் கொண்டிருந்தார் சீமான். கடைசியாக சீமான் மனைவி கயல்விழியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த கயல்விழி, எனக்கு எந்த மன உளைச்சலும் இல்லை. எல்லோரும் எனக்கு ஆறுதல் சொல்லும் போது மட்டும் எதற்கு ஆறுதல் சொல்கிறார்கள்? என நினைத்து கொண்டேன். மலைபோல அவர் இருக்கும் போது எங்களுக்கு என்ன மன உளைச்சல் என்றார்.

அப்போது குறுக்கிட்ட சீமான், ஒரே ஒரு இடத்தில என் மீது கோபப்பட்டாங்க.. குரல் வளைய பிடிச்சுகிட்டு.... ச்சீ.. இவ்வளவு பெண்கள் இருக்கிற கொல்லையில உனக்கு பழகுறதுக்கு ஒரு பொம்பளைய பிடிச்சுருக்க பாரு என திட்டு விழுந்தது. அதற்கு பிறகு இதனைப் பற்றி எல்லாம் பேசுவது இல்லையே என சீமானும் கயல்விழியும் கைகளில் சியர்ஸ் அடித்த படியே பதில் அளித்தனர்.
அப்போது செய்தியாளர் ஒருவர், 3 நாட்களாக மனைவி ஸ்டேட்டஸ் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே என்ன காரணம் என கேள்வி கேட்டார். இந்த கேள்வி விழுந்த உடன், சீமான், மனைவி கயல்விழி உள்ளிட்டோர் குபீரென சிரித்துவிட்டனர்.
அத்துடன் முகமெல்லாம் சிரிப்பாக, கேளுங்க...கேளுங்க.. என உற்சாகமாக செய்தியாளரை தூண்டிவிட்டார் சீமான் மனைவி கயல்விழி.

இதற்கு பதிலளித்த சீமான், மனைவி ஸ்டேட்டஸ்னா யாரும் குறுக்க வராதீங்க என சிரித்தபடியே வெட்கப்பட்டு நகர்ந்தார் சீமான்.
ஆனால் சீமான் மனைவி கயல்விழியோ, Committed என சிரித்தபடியே விளக்கம் தர ஆமா, Committed என தலையாட்டியபடியே பதில் தந்தார் சீமான்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications