பீரோவில் இந்த ஒரு பொருளை மட்டும் வையுங்கள்.. பணத்தட்டுப்பாடு வரவே வராது.. வறுமை ஓட ஓட ஒளிய எளிய வழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணப்புழக்கம் தாராளமாக இருக்கவும், வறுமை என்பதே நம் வாழ்வை நெருங்காமல் இருக்கவும் ஆன்மீக ரீதியாக சில எளிய ரகசியங்கள் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.. குறிப்பாக ஒருவரது வீட்டில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்த பொருட்கள் தங்கியிருக்கும் போது அங்கே நேர்மறை ஆற்றல் அதிகரித்து செல்வம் பெருகத் தொடங்குகிறது.. அந்தவகையில் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும் சில டிப்ஸ்களை பார்ப்போம்.

நம்முடைய வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வைக்கும் இடமான பீரோவில் சில குறிப்பிட்ட மங்கலப் பொருட்களை வைப்பது பணவரவை இரட்டிப்பாக்கும் ஆற்றல் கொண்டது..

Money Attraction

பீரோவில் பணம் பெருக

பச்சை கற்பூரம், ஏலக்காய், லவங்கம் மற்றும் ஒரு சிறிய துண்டு வசம்பு ஆகியவற்றை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாகக் கட்டி பணப் பெட்டியிலோ அல்லது பீரோவின் ஒரு மூலையிலோ வைப்பது செல்வத்தை ஈர்க்கும் ஒரு காந்தம் போல செயல்படும்..

பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு நேர்மறை அதிர்வுகள் அதிகம் என்பதால் பீரோவில் எப்போதும் ஒரு நறுமணம் வீசிக்கொண்டே இருப்பது அவசியம்.. இது வீண் விரயங்களைத் தடுத்து சேமிப்பை உயர்த்த வழிவகை செய்யும்..

வீட்டில் வறுமை ஒழிய டிப்ஸ்

இதேபோல் வறுமையை வேரோடு அகற்றும் சக்தி நம்முடைய கிச்சனில் உள்ள கல் உப்பிற்கு உண்டு.. ஆன்மீக ரீதியாக கல் உப்பு என்பது கடலில் இருந்து தோன்றி மகாலட்சுமியின் அம்சமாகப் பார்க்கப்படுகிறது..

ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் கல் உப்பை நிரப்பி வீட்டின் ஈசானிய மூலை அல்லது வரவேற்பறையின் ஒரு ஓரத்தில் வைப்பது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சிக் கொள்ளும்.. வாரம் ஒருமுறை பழைய உப்பை மாற்றிவிட்டு புதிய உப்பை நிரப்ப வேண்டும்..

அதேபோல் வீட்டைத் துடைக்கும்போது தண்ணீரில் சிறிதளவு கல் உப்பைச் சேர்த்து துடைப்பதன் மூலம் வீட்டில் தங்கியிருக்கும் திருஷ்டிகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் கல் உப்பு வாங்குவது மகாலட்சுமியை வீட்டிற்கு அழைப்பதற்குச் சமமான ஒரு செயலாகும்.. இதனைத் தொடர்ந்து செய்து வரும்போது வீட்டில் தேவையற்ற மருத்துவச் செலவுகள் குறைந்து பணத்தட்டுப்பாடு நீங்குவதை உணர முடியும்..

பச்சை கற்பூரம்

வாரத்தின் மிக முக்கியமான நாட்களான செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டைத் தூய்மையாக வைத்து விசேஷ பூஜைகளை செய்வது குடும்ப முன்னேற்றத்திற்கு மிகவும் நல்லது.. செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர் சூட்டி அல்லது துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபடுவது கடன் தொல்லைகளில் இருந்து விடுதலை அளிக்கும்.

அதேபோல் வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து வீட்டின் நிலை வாசலில் கோலமிட்டு மகாலட்சுமியை வரவேற்க வேண்டும்.. மாலையில் வீட்டில் நெய் தீபம் ஏற்றி லலிதா சகஸ்ரநாமம் அல்லது மகாலட்சுமி அஷ்டகம் போன்ற பாடல்களை ஒலிப்ப செய்வது தெய்வீக ஆற்றலை நிலைக்கச் செய்யும்..

வாஸ்து டிப்ஸ்

தீப ஆராதனையின் போது சாம்பிராணி புகையில் சிறிதளவு வெண்கடுகு சேர்த்து வீடு முழுவதும் காண்பிப்பது கண் திருஷ்டி மற்றும் பொறாமை போன்ற தீய சக்திகளை விரட்டியடிக்கும்.. இந்த எளிய வழிபாட்டு முறைகள் மற்றும் பரிகாரங்களை முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வரும்போது குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வச் செழிப்பும் தானாகவே வந்து சேரும் என்கிறார்கள் பெரியவர்கள்..!!

அதேபோல லவங்கப்பட்டையை அரைத்து தூள் செய்து, பச்சை கலர் துணியில் மடித்து, பச்சை நூலால் கட்டி, பணப்பை அல்லது பர்ஸில் வைத்தாலும் பணம் குறைவின்றி சேர துவங்கும். ஏலக்காய், சோம்பு, பச்சைக் கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை பச்சை நிற பட்டுத் துணி அல்லது பச்சை காகிதத்தில் கட்டி பர்ஸினுள் வைத்து கொண்டாலும் கடன் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+