சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மதவாதம்".. நீங்க அலர்ட்டா இருக்கணும்.. திமுக அரசுக்கு பாஜக நாராயண் திருப்பதி வைத்த முக்கிய வேண்டுகோள்

Google Oneindia Tamil News

சென்னை: "மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கான இருப்பிடமாக, தமிழகம் மாறாமல் இருக்க, தமிழக அரசு எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும்" என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த வாரம் கேரளாவில் ஒரு பயங்கரம் நடந்தது.. அங்குள்ள ஆர்எஸ்எஸ் தொண்டர் பெயர் சஞ்சித்.. 26 வயதாகிறது..

சம்பவத்தன்று இவர் பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியில், மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென 4 பேர் கொண்ட கும்பல், சஞ்சித்தை வழிமறித்து, கொடூரமாகவும் தாக்கிவிட்டு தப்பியது.

ஒபெக் நாடுகளுக்கு செக்.. கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த பைடன் அதிரடி.. இந்தியா நிலைப்பாடு என்ன?ஒபெக் நாடுகளுக்கு செக்.. கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த பைடன் அதிரடி.. இந்தியா நிலைப்பாடு என்ன?

 பரிதாப பலி

பரிதாப பலி

இதில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய சஞ்சித் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்... ஆனால், சஞ்சித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டனர். மேலும், இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

 யார் காரணம்?

யார் காரணம்?

பட்டப்பகலில் நடந்த கொலைக்குப் பின்னால் இருப்பதாக பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன... ஆனால், எஸ்டிபிஐ இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. இதனிடையே, அவரை கொன்ற கும்பல், கோவைக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கேரள காவல் துறை தகவலை வெளியிட்டிருந்தது.. மேலும், தமிழகத்தில் அவர்கள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 கோரிக்கை

கோரிக்கை

இந்நிலையில்தான், மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து தமிழக பாஜக ஒரு அறிக்கை விடுத்துள்ளது.. பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது: கடந்த வாரம், கேரளாவில் மனைவி முன்னே, 27 வயது இளைஞர் சஞ்சித் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற கும்பல், கோவைக்கு தப்பி சென்றிருக்கலாம் என கேரள காவல் துறை கூறியுள்ளது. தமிழகத்தில் அவர்கள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடப்பதாக சொல்லப்படுகிறது.

 வேண்டுகோள்

வேண்டுகோள்

ஏற்கனவே, தமிழகத்தில் நடந்த ராமலிங்கம், சசிகுமார், எஸ்.ஐ., வில்சன் படுகொலையில், மத அடிப்படைவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டனர். இந்நிலையில், கேரளாவில் படுகொலை செய்துவிட்டு, தமிழகத்துக்கு தப்பி உள்ளதாக சொல்லப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. மத அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கான இருப்பிடமாக, தமிழகம் மாறிவிடக் கூடாது என்ற அக்கறையோடு, காவல் துறையும், தமிழக அரசும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டியது அவசியம். பயங்கரவாதிகளுக்கு துணைபோகும் அமைப்புகளை தடை செய்ய வேண்டிய நேரம் இது என்பதை உணர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Kerala RSS worker murder and TN BJP Narayan Tirupati statements about it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X