Khushbu Sundar: தவெகவுக்கு 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இருக்கிறார்களா? குஷ்பு தடாலடி கேள்வி!
புதுச்சேரி: தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தவெகவிற்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா என பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுவையில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: புதுவை பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார். அவர்தான் இந்த முறையும் ஜெயிக்க போகிறார். அவருக்கு இப்போதே நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முறையும் புதுவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெல்லும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால் புதுவையில் அப்படி இல்லை. பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கான நலத்திட்டங்கள் அதிகமாக நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ராமலிங்க மாநிலத் தலைவர் மட்டுமல்ல, எங்களுடைய வெற்றி வேட்பாளர் மீண்டும் அவர் வெற்றி பெறுவார்.
தவெக தலைவர் விஜய் தனித்து நிற்பதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய கட்சிக்கு 234 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் முதலில் இருக்கிறார்களா என சிறிய சந்தேகம்தான் எல்லாருக்கும் இருக்கிறது.
திமுகவிற்கும் தவெகவிற்கும்தான் போட்டி என விஜய் பேசுவது என் வழியில் நான்தான் ராஜா என சொல்லும் உரிமை அனைவருக்கும் இருப்பது போல விஜய்க்கும் இருக்கிறது. ஆனால் இந்த முறை தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
எங்கள் சார்பில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராவார். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என குஷ்பு தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, இவர்களது நட்பு மற்றும் தொழில்முறை சார்ந்த உறவை தவறாக சித்தரிக்கும் வகையில் பல பதிவுகள் பகிரப்பட்டு வந்தன. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, நடிகை குஷ்பு தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அதில், "யாரைப் பற்றியும் அவதூறு பரப்புவது என்பது மிகவும் எளிதான விஷயமாகிவிட்டது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. குறிப்பாக, திரைத்துறையில் இருப்பவர்கள் என்பதற்காக அவர்களைப் பற்றி எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பது தவறான மனப்போக்கு" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ள குஷ்பு, சமூக வலைதளங்களில் நாகரீகமான விவாதங்கள் மட்டுமே நடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
விஜய் மற்றும் த்ரிஷாவுக்கு ஆதரவாக குஷ்பு குரல் கொடுத்திருப்பது அவர்களது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேவையில்லாத வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இது போன்ற தைரியமான கருத்துக்கள் அவசியம் என்று பலரும் குஷ்புவைப் பாராட்டி வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications