இளையராஜாவை குறி வைப்பவர்கள் யார் தெரியுமா?.. குஷ்புவின் கொந்தளிப்பு ட்வீட்!
சென்னை: இளையராஜாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள தேசிய பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு நன்றியையும் பாராட்டையும் குஷ்பு சுந்தர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் முன்னுரையை எழுதியிருந்தார். அது மாநில மற்றும் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஒரு தரப்பினர் அவரது கருத்துக்கு எதிர்ப்பும், மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவின் கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ள நிலையில் தனது கருத்தை ஒரு போதும் திரும்ப பெறமாட்டேன் என இளையராஜா தெரிவித்துள்ளார்.

கங்கை அமரன்
இதுகுறித்து அவர் தனது சகோதரர் கங்கை அமரனிடம் கூறுகையில் எனது கருத்தை ஒரு போதும் திரும்ப பெற மாட்டேன், எனது ட்யூனையும் நான் ஒரு போதும் திரும்ப பெற்றதில்லை. நான் புத்தகத்தை படித்து பார்த்துவிட்டுதான் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டேன்.

ஓட்டு கேட்கவில்லை
எனது கருத்து நான் கூறினேன். அதே வேளையில் மற்றவர்கள் கருத்துக்கும் நான் விமர்சனம் செய்ததே இல்லை. நான் பிரதமர் மோடியின் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்றும் சொல்லவில்லை, ஓட்டு போட வேண்டாம் என்றும் சொல்லவில்லை. நான் எந்த கட்சியையும் சாராதவன் என இளையராஜா தன்னிடம் தெரிவித்ததாக கங்கை அமரன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
இந்த நிலையில் இளையராஜாவின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கூறுகையில் தமிழ்நாட்டை ஆளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை அவமதித்து வருகிறார்கள்.

நியாயமாகாது
ஆளும் தரப்புக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமாகவும் இளையராஜா பேசவில்லை என்பதற்காக நாட்டின் ஆகச்சிறந்த இசைமேதையை இப்படி இழிவு செய்து வருகின்றனர். அவரது கருத்து என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். இசை மேஸ்ட்ரோவை அவமதிப்பது நியாயமாகாது என நட்டா ஒரு கடிதம் வெளியிட்டிருந்தார்.
Recommended Video

குஷ்பு சுந்தர்
இந்த கருத்தை வரவேற்று குஷ்பு சுந்தர் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் இசைஞானி இளையராஜாவுக்கு ஆதரவாக கருத்தை வெளியிட்ட தேசிய தலைவர் ஜே பி நட்டாவுக்கு எனது பாராட்டுகளும் நன்றிகளும். இளையராஜாவை குறி வைத்து விமர்சனம் செய்பவர்கள் யாரென்றால் கருத்து சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது என விமர்சிப்பவர்கள்தான். ஜனநாயக அடிப்படை உரிமைகள் இரு தரப்பிலும் இருக்க வேண்டும் என குஷ்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications