கியர் எகிறிய கிளாம்பாக்கம்.. அதென்ன 2 அடி உயரத்துல? தமிழக அரசு செம ஸ்பீடு.. சென்னையின் வரப்பிரசாதம்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் வடிகால் அமைக்கும் பணிகள் துரிதமாகி உள்ள நிலையில், விரைவில் பஸ் ஸ்டாண்டு திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்த ஒரு அப்டேட் தற்போது கிடைத்துள்ளது.
கிளாம்பாக்கம் பஸ் முனையத்தை பயன்படுத்துவதற்கான செயல் திட்டம் ஒன்று 4 நாட்களுக்கு முன்பு தயாரித்து வெளியிடப்பட்டது. அதன்படி, பேருந்து நிலையத்தில் அடித்தள 'பார்க்கிங்' பகுதிக்கு செல்லும் தனியார் வாகனங்களுக்கு நுழைவு, வெளியேற தனி வாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, பிரதான கட்டடத்தின் முகப்பு பகுதியில் பயணிகளை இறக்கிவிடவும், மறுபடியும் ஏற்றி செல்லவும் வரும் தனியார் வாகனங்களுக்கு, தனி நுழைவாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நுழைவாயில்கள்: நடந்து செல்வோருக்கும், பைக்குகளில் தனி நுழைவாயில் ஒதுக்கப்படுகிறது. வெளியூர் பஸ்கள் உள்ளே வர, ஜிஎஸ்டி சாலையில் ஒரு நுழைவாயில் ஒதுக்கப்படும். இந்த பஸ்கள் வெளியேற, பின்புறத்தில் அயஞ்சேரியை ஒட்டிய நுழைவாயில் ஒதுக்கப்படும். இதில், ஆம்னி பஸ்களுக்கென்று தனியாக எந்த நுழைவாயிலும் ஒதுக்கப்படவில்லை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 'பார்சல்' சேவையை செயல்படுத்த, போக்குவரத்துக் கழகங்கள் அனுமதிக்கப்படும். ஆனால், இரவு 11:00 மணி முதல் காலை 5:00 மணி வரையே இதற்கான பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். பார்சல் சேவையில் பயன்படுத்தப்படும் பொருட்களை அப்புறப்படுத்த, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த செயல்திட்டம் விரைவில் வெளியிடப்படும்" என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், விரைவில் பஸ் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் இத்தனை நாளும் நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஜுன் மாதமே, "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்தது. ஆனால், நடைமுறை சிக்கல்கள் இங்கு கிளம்பியதால், இதை திறந்து வைப்பது ஒத்திவைக்கப்பட்டது.
மழைநீர் வடிகால்: காரணம், மழை பெய்தாலே, இந்த பஸ் ஸ்டாண்டு பகுதியில், மழைநீர் தேங்குவது, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது.. கட்டுமான பணிகளின்போது, இந்த சிக்கல் தெரியாமல் இருந்த நிலையில், சென்னையில் பெய்த கோடை மழையால், பஸ் ஸ்டாண்டு பகுதி முழுவதுமே நீரில் மிதந்தது.. அதனால், தேங்கி நிற்கும் நீரை மறுபுறம் கொண்டு செல்ல ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே குழாய் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அதேபோல, பஸ்கள், எளிதாக சென்று வரும் வகையில் கிளாம்பாக்கத்தை சுற்றி சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.. மேலும், பஸ்நிலைய மேற்கூரை பணிகள், பயணிகள் வந்து தங்குவதற்கான தங்குமிடம், உணவகம், கடைகள் பணிகளும் ஆரம்பமாயின. இந்த பணிகள் எல்லாமே இந்த மாதத்திற்குள் முடித்துவிட முடியாது என்பதால்தான், கிளாம்பாக்கம் பஸ்நிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் கூறியிருந்தனர்.
விரைவில் திறப்பு: இப்போது, இந்த பணிகள் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்துவிட்டதாம்.. அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சிஎம்டிஏ கூட்டம் நடைபெற்றது. இதில், கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் பொதுமக்களுக்கான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன. ஜிஎஸ்டி சாலையில் நடைபெற்று வரு மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
அதிகாரிகள்: அதன்படி, ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வருகிற செப்டம்பர் மாதத்திற்கு இந்த பணிகள் முழுவதுமாக நிறைவுபெறும் என்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்துவிட்டால், அதற்கு பிறகு, நடைமுறை சிக்கலோ, வசதி குறைவு என்றோ பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த கால இடைவெளி எடுத்து கொள்ளப்படுகிறது என்றும், மழைநீர் வடிகால் பணி மட்டுமே மிச்சமிருப்பதால், அதுவும் சில நாட்களில் முடிந்துவிடும் என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகறிது.
மழைநீர் வடிகால் பணிக்காக இத்தனை சிரத்தை எடுத்து கொள்வதற்கு காரணம், மழைக்காலங்களில் பஸ் ஸ்டாண்டுக்குள் தண்ணீர் தேங்குவதை தடுக்க முடியாமல் இருக்கிறதாம்.
விரைவில் முடிவு: காரணம், தேசிய நெடுஞ்சாலையைவிட, இந்த பஸ் ஸ்டாண்டு, 2 அடி உயரத்துக்கு மேலே இருக்கிறது. அதனால்தான், தேசிய நெடுஞ்சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர், இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்து வந்து தேங்கி நின்றுவிடுகிறது. அதனால்தான் கால்வாய் அமைக்கும் பணி துவங்கி உள்ள நிலையில், 90 சதவீதம் அந்த பணிகள் முடிந்துவிட்டன.. விரைவில் திறக்கப்படும்" என்கிறார்கள் அதிகாரிகள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications