கிளாம்பாக்கத்தை ரெடி பண்ணிட்டீங்களா? பஸ் ஸ்டாண்டுல எந்த வசதியும் காணோமே.. கோட்டைக்கு எகிறிய மேட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு இழுபறியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள வசதிகள் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.. இதுகுறித்து தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு இன்னும் திறக்கப்படவில்லை.. இப்போதைக்கு திறக்கப்படும் சூழலும் இல்லை என்றே தெரிகிறது.. கட்டுமானப்பணிகள் மொத்ததும் முடிந்து திறப்புவிழாவுக்கு தயாரானபோதுதான், மழை நேரத்தில் பஸ் ஸ்டாண்டு முழுக்க தண்ணீர் தேங்கி நிற்பது தெரியவந்துள்ளது.
மழைநீர்: அதாவது, தேசிய நெடுஞ்சாலையைவிட, இந்த பஸ் பஸ்டாண்டு, 2 அடி உயரத்துக்கு கீழே இருக்கிறது.. அதனால்தான், தேசிய நெடுஞ்சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் நீர், இந்த பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்து வந்து தேங்கி நின்றுவிடுகிறது. இதற்கு பிறகுதான், கால்வாய் அமைக்கும் பணி துரிதமாக ஆரம்பமாகி உள்ளது..

Kilambakkam New Bus Stand Facilities and Major request to Tamil Nadu Government

கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. மற்றொருபக்கம், கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடி செலவில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி 4 மாதங்களில் தொடங்கப்போவதாகவும் அறிவிப்பு வெளியானது. கிட்டத்தட்ட 3 நடைமேடை கொண்ட கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகளை, ஒரு வருடத்துக்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

ரயில்வே ஸ்டேஷன்: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரெயில்கள், இந்த ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ரயில் நிலைய பணிக்கு முதற்கட்டமாக ரூ.40 லட்சம் நிதியை ரெயில்வே நிர்வாகத்திற்கு, சிஎம்டிஏ வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறியிருக்கின்றன.
இந்நிலையில், தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஒரு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் தலைவர் தோ.வில்சன், பொதுச்செயலாளர் பா.ஜான்ஸிராணி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை இதுதான்:

Kilambakkam New Bus Stand Facilities and Major request to Tamil Nadu Government

மாற்று திறனாளிகள்: "சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படவுள்ளது. இப்புதிய பேருந்து நிலையம் மாற்றுத் திறனாளிகளுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்க அரசு முயற்சிகள் எடுத்துள்ளதை அறிகிறோம். எனினும், அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் முழுமையாக பயன்படுத்த ஏற்றதாக உருவாக்கப்படவில்லை என தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறிப்பாக, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொட்டுணர்ந்து செல்லும் தரை அனைத்து இடங்களுக்கும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்றும், செவி மற்றும் பேசும் திறன் பாதித்த மாற்றுத் திறனாளிகள் அறியும் வகையில் காட்சி அறிவிப்பு எல்லா இடங்களிலும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுதவிர, கடுமையாக பாதித்த மாற்றுத் திறனாளிகள் இயன்ற அளவில் பேருந்துகளின் அருகாமையில் சென்று வாகனங்களை நிறுத்த தனி வசதி இல்லை என்றும் தெரிகிறது.

உரிய வசதிகள்: எனவே, அனைத்து துறை அதிகாரிகளை கொண்டு விரைவில் முழுமையான ஆய்வு செய்ய வேண்டும். மேலும், சட்ட விதிகளின்படி உரிய வசதிகளை இப்புதிய பேருந்து நிலையத்தில் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+