Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம், வேளச்சேரி, போரூர்.. சென்னையில் ஜனவரி மாதத்தில் நடக்க உள்ள மூன்று பெரிய விஷயங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வரும் ஜனவரி மாதம் அதாவது பொங்கலுக்குள் மூன்று முக்கியமான விஷயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றின் விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம். கிளாம்பாக்கம் ரயில் நிலையம், வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில், பூந்தமல்லி போரூர் மெட்ரோ ரயில் ஆகியவை வரும் ஜனவரி மாதத்தில் சாத்தியமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மூன்றும் சென்னை மக்களுக்கு மிகவும் முக்கியமான போக்குவரத்து கட்டமைப்பு ஆகும்.

சென்னையில் ஐடி துறை, ஆட்டோ மொபைல் துறை, துறைமுகம், எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகரிப்பு, பல்வேறு தொழில் நிறுவனங்கள், என்ஜினியரிங் நிறுவனங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் சென்னை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. சென்னை மாநகரம் கடந்த 25 வருடங்களில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து வசதிகளை அதிக அளவில் மேம்படுத்த வேண்டிய காட்டாயம் ஏற்பட்டுள்ளது.

kilambakkam Parangimalai Porur Three big things to expect in Chennai by January

புதிய விமான நிலையம், புதிய ரயில் முனையங்கள், புதிய ரயில் பாதைகள், புதிய பேருந்து நிலையங்கள் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. புதிய மெட்ரோ வழித்தடங்களும் உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. அடுத்ததாக சென்னை மெட்ரோவில் இரணடாம் கட்டமாக மெட்ரோ வழித்தடங்களில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதேபோல் பறக்கும் ரயில் பணியும் வேளச்சேரி பரங்கிமலை இடையே முடியும் தருவாயில் உள்ளது.

இதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரயில் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டு வருகிறார்கள்.. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை, நடைமேடையின் மேற்கூரை அமைக்கும் பணிகள், பிரம்மாண்டான நடைபாதை மேம்பாலம் பணிகள் (Sky walk foot over) தீவிரமாக நடந்து வருகிறது.

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தின் இறுதி பணிகள் நிறைவடைந்த பின்னர், 2026 ஜனவரி மாதம் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் கூறுகிறார்கள். அதேநேரம் ந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும் ஆகாய நடைபாதையின் கட்டுமானப் பணிகள் முடிந்தால் மட்டுமே இது சாத்தியம். எனினும் பணிகள் விறுவிறுப்பாக நடப்பதால் ஜனவரியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தாக பூந்தமல்லி போரூர் மெட்ரோ ரயில் பாதை: சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 116.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு பணிகள் நடந்து வருகிறது. 2-ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது. இதில், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் முதல் வழித்தடமாக பூந்தமல்லி-போரூர் சந்திப்பு வரையிலான 10 கிலோ மீட்டர் துாரத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனை ஓட்டப்பணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மெட்ரோ செய்தது. அப்போது, இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தி காண்பிக்கப்பட்டது. 90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கி பயணிகளின் பயண வசதி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

பிரேக்கிங் தொழிநுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகளின் வசதி, பயணிகளின் பாதுகாப்பு, கட்டுமானம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த சோதனையின் அடிப்படையில் விரைவில் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கிடைத்தால் ஜனவரிக்குள் ரயில்கள் ஓடத்தொடங்கிவிடும்.

அதேபோல் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை திட்டம் பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பிலேயேகிடக்கிறது. முதலில் பரங்கிமலை தில்லை கங்கா நகர் இடையே நிலம் பிரச்சனை காரணமாக தாமதம் ஆனது. அடுத்ததாக மெட்ரோ ரயில் பணிகளால் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒரு வழியாக தற்போது வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் தண்டவாளம் பணி மற்றும் மின்மயமாக்கும் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டி உள்ளது. எஞ்சிய பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் காரணத்தால், அனைத்து பணிகளும் டிசம்பர் மாதம் நிறைவடைந்துவிடும் என்கிறார்கள். எனவே ஜனவரி மாதம் இறுதியில் இந்தப் பாதையில் சேவை தொடங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். எனினும் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்த பின்னர் தேதி உறுதி செய்யப்படும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+