கிளாம்பாக்கத்திற்கு வந்த சூப்பர் அப்டேட்.. ஆகாய நடை மேம்பாலம் அமைக்க பூமி பூஜை.. என்னென்ன வசதிகள்
சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய நுழைவாயிலில் ரூ.74.50 கோடி மதிப்பில் புதிய ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு மற்றும் ரயில்வே ஸ்டேஷனை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க பூமி பூஜை போடப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷனிலிருந்து, பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. பல்வேறு வசதிகளுடன் இந்த நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் அதிகரிக்கும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதியில் cரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி ஆகியவையுடன் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது.
இதனிடையே இன்றைய தினம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய நுழைவாயிலில் ரூ.74.50 கோடி மதிப்பில் புதிய ஆகாய நடைமேம்பாலம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரை 400 மீட்டர் தூரத்திற்கு நடை மேம்பாலம் அமைகிறது. தொடர்ந்து சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகளுடன் கூடிய புதிய காலநிலை பூங்காவையும் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்துள்ளார்.
ஆகாய நடை பாலம் அமைக்கப்பட்டால், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள், எளிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தடைய முடியும். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மேல் இந்த ஆகாய நடைபாலம் அமைய இருப்பதால் , சாலையை ஆபத்தான முறையில் கடக்க வேண்டிய சூழ் ஏற்படாது. இது பயணிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications