கிளாம்பாக்கத்தில் குறையாத பயணிகள் கூட்டம்.. ஓட்டு போட செல்ல முடியாமல் தவிப்பதாக பயணிகள் வேதனை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில் சென்னை கிளாம்பாக்கத்தில் தற்போதும் கூட்டம் அலைமோதுகிறது. திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இல்லை. இதனால் வாக்களிக்க சொந்த ஊர் செல்ல முடியாத நிலை உள்ளது. முன்பதிவு இல்லா பேருந்துகளை இயக்க வேண்டுகிறோம் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தொடர்ந்து வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக நேற்று வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் சொந்த ஊருக்கு வந்தனர்.

சென்னை, கோவை உள்பட வெளிமாவட்டங்களில் பணியாற்றி வரும் மக்களும் சொந்த ஊர் புறப்பட்டனர். நேற்று ஒரே நேரத்தில் பலரும் புறப்பட்டதால், சென்னை கிளாம்பாக்கம், கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் நள்ளிரவில் கடும் கூட்டம் நிலவியது. சென்னை கிளாம்பாக்கத்தில் இன்று காலையிலும் கூட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. போதிய பஸ் வசதிகள் இல்லை என பயணிகள் குற்றச்சாட்டு வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது மதியம் வரையிலும் கிளாம்பாக்கத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். குடும்பத்துடன் தவித்து வரும் பயணிகள், பஸ்கள் இல்லை என குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இல்லை. இதனால் வாக்களிக்க சொந்த ஊர் செல்ல முடியாத நிலை உள்ளது. முன்பதிவு இல்லா பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரும்பாலும் பாயிண்ட் டூ பாயிண்டு பஸ்கள் இயக்கப்படுவதால் பயணிகள் இத்தகைய கோரிக்கையினை வைத்துள்ளனர்.
சட்டசபை தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வேலை செய்து வரும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொந்த ஊர் புறப்பட்டனர். பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சுமார் 11 ஆயிரம் பேருந்துகளை அரசு இயக்கி இருந்தது. இருப்பினும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் ஒரு சில பகுதிகளுக்கு பஸ்கள் இல்லை என கூறப்படுகிறது.
ஏற்கனவே ரயில், பஸ்களில் கூட்டம் அதிகளவில் இருந்ததால் பஸ்களில் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டனர். ஆனால் பஸ் நிலையங்களிலும் அதிகமாக கூட்டம் இருந்ததால் சொந்த ஊர் செல்லமுடியாமல் பயணிகள் பலரும் தவித்து வந்தனர். இதேபோல் ஒரே நேரத்தில் பலரும் சொந்த ஊருக்கு கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டதால், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்களிலும் மக்கள் நின்றபடி பயணம் செய்ய வேண்டிய நிலையே இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications