தினகரன் டீமிலிருந்து இன்னொரு விக்கெட்டும் காலி.. அதிமுகவுக்கு தாவினார் மாஜி அமைச்சர்!
திமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன்
சென்னை: டிடிவி தினகரன் அணியில் திரும்பவும் ஒரு விக்கெட் விழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன் அமமுகவில் இருந்து விலகி இப்போது மீண்டும் அதிமுகவிலேயே இணைந்து விட்டார்.
அதிமுகவின் சீனியர்களில் ஒருவர் கிணத்துக்கடவு தாமோதரன். கோவை மாவட்ட அதிமுக நிர்வாகிகளில் மிகவும் முக்கியமானவர்.
அதிமுக சார்பில் 3 முறை எம்எல்ஏ, ஒரு முறை அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர்.
கட்சி இரண்டாக பிரிந்ததும், ஓபிஎஸ் அணியில் வந்து சேர்ந்தார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுகவில் இருந்து விலகி, டிடிவி தினகரனின் அமமுக கட்சியில் இணைந்தார்.

விலகினார்
இதற்கு அப்போது அவர் சொன்ன காரணம், "ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பலரும் டம்மியாகத்தான் இருக்கிறார்கள். எங்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை. அதனால்தான் டிடிவியிடம் வந்து சேர்ந்தேன்" என்றார்.

செயல்பாடுகள்
ஆனால் முழுசா 6 மாசம்கூட முடியவில்லை. இந்நிலையில், அமமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவிலேயே இணைந்துள்ளார். இதற்கு இப்போது அவர் சொல்லும் காரணம், தினகரனின் செயல்பாடுகள் பிடிக்கவில்லையாம்.

டிடிவி தினகரன்
அதிமுகவுக்கு நல்ல நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் தாமோதரன் இங்கு வந்து மீண்டும் சேர்ந்துள்ளார். டிடிவி தினகரன் பக்கம் இருப்பவர்கள் திமுகவுக்கு செல்வது போய் இப்போது அதிமுகவுக்கும் வர ஆரம்பித்துள்ளனர்.

அதிமுக பலம்
திமுகவுக்கு மவுசு குறைந்துவிட்டதா? அல்லது அதிமுகவின் பலம் அதிகமாகி கொண்டு போகிறதா என்றுதான் தெரியவில்லை. ஆக மொத்தம் தொடர் தோல்வியையே சந்தித்துவரும் தினகரனுக்கு இதுவும் பெரிய அடிதான்!
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications