போலீஸுக்கு போகாதேனு விக்ரமன் அழுதார்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாம் என கேட்டார்.. கிருபா பரபரப்பு
சென்னை: போலீஸுக்கெல்லாம் போக வேண்டாம், நாம் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாம் என சொன்னார் என விக்ரமனுக்கு கிருபா பதில் அளித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன். ஆளுநர் ஒரு முறை தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்ற வேண்டும் என பேசியிருந்தார். வெளியில் நடக்கும் விஷயம் தெரியாமல் தமிழ்நாடு உருவான நாளன்று சிறப்பு நிகழ்ச்சியாக தொகுப்பாளினி டிடி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார்.

அப்போது தமிழ்நாடு உருவாக்கம் குறித்து விக்ரமன் பேசியபோது தமிழ்நாடு என உரக்க சொன்னார். அதற்கு டிடி வெளியே ஆளுநர் பேசியதை மறைமுகமாகவும் அதே சமயம் விக்ரமனுக்கு புரியாதபடியும் கூறினார். இதை வெளியே இருந்து பார்த்த மக்களுக்கு அவர் ஏதேச்சையாக பேசியிருந்தாலும் ஆளுநருக்கு பதிலடியாகவே பார்க்கப்பட்டது.
இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளராக உள்ளார். இவர் பிக்பாஸில் டைட்டிலை வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த நிலையில் விக்ரமன் மீது கிருபா என்ற பெயர் புகார் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் கிருபா முனுசாமி.
இவரை விக்ரமன் காதலித்து ஏமாற்றியதாகவும் இவரிடம் விக்ரமன் காசு வாங்கி ஏமாற்றியதாகவும் விக்ரமன் தனக்கு ஐ லவ் யூ என சொன்ன ஸ்கிரீன்ஷாட்டையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்த நிலையில் தன் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விக்ரமன் விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: என் மீது கிருபா முனுசாமி என்பவர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். ஒரு நாணயம் என்றிருந்தால் அதற்கு இரு பக்கமும் இருக்கும். என்னுடைய பக்கத்தையும் கேளுங்கள். இதில் பாதிக்கப்பட்டவன் என்றால் அது நான் மட்டும்தான். என் மீது பழி சுமத்த வேண்டும் என்றே கிருபா இப்படி செய்திருக்கிறார்.
நாங்கள் 2020 இல் பழகினோம். அவர் பிஎச்டி படிப்புக்காக சென்றிருந்தார். அப்போது அவரிடம் நான் எனது தேவைகளுக்கு பணம் வாங்கியது உண்மைதான். அவருக்கு வாக்கு கொடுத்ததை போல் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் அதில் கிடைத்த பணத்தை வைத்து அவரிடம் பெற்ற பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன். அதற்கான ஸ்கிரீன்ஷாட் இதோ இணைத்திருக்கிறேன். மேலும் 2022 இல் கிருபா எனக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்திருக்கிறேன்.
நீங்களே இந்த காதல் கடிதத்தை படித்து பாருங்கள். மோசடி செய்பவனை பார்த்து எந்த பெண்ணாவது இப்படி ஒரு காதல் கடிதத்தை எழுதுவாரா, என விக்ரமன் கேட்டுள்ளார். மேலும் விக்ரமன் அளித்த பேட்டியில் கிருபா மீது சட்டரீதியாக புகார் அளிக்க போவதாக விக்ரமன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கிருபா முனுசாமி கூறுகையில் விக்ரமன் வாய்க்கு வந்தபடி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நடந்த உண்மையை மறைக்க முடியாது.
10 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் அவர் நட்பாக பழகினார். ஆனால் ஒரு கட்டத்தில் எங்களுடைய நட்பு காதலாக மாறியது. அவர் கல்யாணம் செய்யும் எண்ணத்தில் என்னுடன் பழகவில்லை என சொல்கிறார். அவரும் நானும் பேசிய சில வாட்ஸ் ஆப் சாட்டுகளை வெளியிட்டிருக்கிறேன். அதை பார்த்தால் என்னுடன் அவர் எப்படி பழகினார் என்பது தெரியும்.
நான் லண்டனில் இருந்த போது என்னை பார்ப்பதற்காகவே விசா அப்ளை செய்தார். ஆனால் அது கிடைக்கவில்லை. அத்துடன் நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினராக இல்லையே தவிர மற்றபடி அந்த கட்சியின் அபிமானியாக நான் பல ஆண்டுகளாக இருக்கிறேன். என்னுடன் அவர் பழகியது ஒரு உள்நோக்கத்துக்காக தான் என்பது எனக்கு தாமதமாக தெரிந்தது.

அவருக்கு தேவைப்பட்டால் கடன் வாங்குவதும் ஐ லவ் யூ சொல்லிவிட்டு இப்போது இல்லை என பொய் சொல்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகுதான் அவர் பிரபலமானார். அதன் பிறகுதான் அவருக்கு கட்சியில் ஒரு பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் என்னை அவர் அவாய்டு செய்கிறார். நான் விசாரித்த வரையில் விக்ரமன் ஏற்கெனவே சில பெண்களை ஏமாற்றியுள்ளார்.
அதனால் அவரை கல்யாாணம் செய்து கொள்ளும் எண்ணத்தையே நான் விட்டு விட்டேன். இனி அவர் எந்த பெண்ணையும் ஏமாற்றக் கூடாது என்ற நோக்கில் தான் போலீஸில் புகார் தரலாம் என முடிவு செய்தேன். அதை தெரிந்து கொண்டுதான் 3 மாதத்திற்கு முன்பே அவர் போலீஸுக்கு போக வேண்டாம் என அழுதார். அது மட்டுமல்லாமல் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாம் என்றார். ஆனால் நான் மறுத்துவிட்டேன், ஒரு கட்டத்தில் என்னை மிரட்டினார். கெட்ட வார்த்தைகளால் திட்டினார். திருமாவளவனையே நேரில் சந்தித்து விக்ரமன் குறித்து பேசியுள்ளேன். அதனால்தான் ட்விட்டரில் விக்ரமன் குறித்து பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications