கிசான் சம்ரிதி திட்டம் ஜாக்பாட்! விவசாயியின் தலைவிதியை மாற்றி 12 வருட சாதனை.. எல்.முருகன் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசு, இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகக் கொண்டு வந்த சூப்பரான திட்டம்தான் கிசான் சம்ரிதி திட்டம். இந்த திட்டத்தில் வேளாண் துறையில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் மற்றும் சாதனைகள் குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெருமிதத்தோடு தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் திறமையான விவசாயத் தலைமுறையையே இந்தத் திட்டம் உருவாக்கியிருக்கிறது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொண்டுள்ளார்.

மத்திய அரசு இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகக் கொண்டு வந்த ஒரு மிக முக்கியமான திட்டம்தான் கிசான் சம்ரிதி திட்டம். விவசாயிகளுக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் ஒரே இடத்தில் கொடுப்பதுதான் இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம்..

Kisan Samriddhi Scheme

பிரதான் மந்திரி கிசான் சம்ரிதி திட்டம்

நாடு முழுவதும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் உரக் கடைகளை எல்லாம் "பிரதான் மந்திரி கிசான் சம்ரிதி மையங்கள்" என்கிற பெயரில் ஒரே கூரையின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் நல்ல ரக விதைகள் என அனைத்தும் எந்தவித அலைச்சலும் இல்லாமல், ஒரே இடத்தில் மிக எளிதாகக் கிடைத்துவிடுகிறது.. அதுவும் நியாயமான விலையில்..!!

இந்த மையங்கள் வெறும் விற்பனைக்கூடமாக மட்டும் செயல்படாமல், விவசாயிகளுக்கு பல வழிகளில் உறுதுணையாகவும் இருந்து வருகின்றன. நிலத்தின் மண் தரத்தை எப்படி பரிசோதனை செய்வது, நவீன விவசாயக் கருவிகளை எந்தெந்த வழிகளில் பயன்படுத்துவது போன்ற பயனுள்ள ஆலோசனைகளையும், மத்திய அரசின் மற்ற விவசாய நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வையும் இங்குள்ள அதிகாரிகள் விவசாயிகளுக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறார்கள்.

விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்

எனவேதான் புரோக்கர்களின் சுரண்டல் எதுவுமே இல்லாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் நேரடியாகப் பயனடைந்து வருகிறார்கள். விவசாயத்திற்கான முதலீட்டு செலவு கணிசமாகக் குறைந்து, விளைச்சலும் லாபமும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. விவசாயிகளின் நேரமும் தேவையில்லாத அலைச்சலும் மிச்சமாகி, அவர்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமே உயர்ந்திருப்பதுதான் இந்த திட்டத்தின் ஆகச்சிறந்த ஸ்பெஷாலிட்டியாகப் பார்க்கப்படுகிறது.

அந்த அளவுக்கு இந்த திட்டம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்பார்த்துவிட்டு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இந்த திட்டம் குறித்து ஒரு முக்கிய விஷயத்தை தனது எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் ஷேர் செய்துள்ளார்.

எல்.முருகன் பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால் கொண்டு வரப்பட்ட இந்த கிசான் சம்ரிதி திட்டம், தொடங்கி வெற்றிகரமாக 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் நலனை மட்டுமே முதன்மை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்தத் திட்டம், இன்றைக்கு இந்திய வேளாண் துறையையே அடியோடு மாற்றி ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்று எல்.முருகன் மனதார பாராட்டியுள்ளார்.

மேலும் விவசாயிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சி, நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துவது, உணவு உற்பத்தியில் நமது இந்தியா தன்னிறைவு அடைவது என எல்லாவற்றிற்கும் இந்தத் திட்டம்தான் மிக வலுவான அடித்தளமாக அமைந்திருக்கிறது என்றும் இதன் மூலம் சர்வதேச அளவிற்குப் போட்டியிடக்கூடிய ஒரு புதிய மற்றும் திறமையான விவசாயத் தலைமுறையையே இந்தத் திட்டம் உருவாக்கியிருக்கிறது என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதத்துடன தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ் விவசாயிகளின் நலனை இன்னும் வலுப்படுத்துவோம் என்று உறுதியளித்த எல்.முருகன், "ஜெய் கிசான், ஜெய் பாரத்" என்ற முழக்கத்தோடு தனது நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார்.. இந்த பதிவானது விவசாயிகளின் கவனத்தை பெற்று வருகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+