சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"காலி எடப்பாடி".. என்ன கம்பு சுத்தினாலும், அண்ணாமலைக்கு 5000 வாக்குகூட தேறாது.. சொல்றது யார் யாருங்க

அதிமுக ஆதரவாளர் கிஷோர் கே சாமி மீண்டும் ட்விட் போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "கமலாலயத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் மத்தியில் இரட்டை இலையை முடக்கி விடுவேன் எடப்பாடியாரை ஒருமையில் பேசி, காலி செய்துவிடுவேன் என்றெல்லாம் அண்ணாமலை பேசியதை வேடிக்கை பார்க்க அண்ணா திமுகவினர் சப்பைகளா??? என்று கேள்வி எழுப்பி உள்ளார் கிஷோர் கே சாமி. இதனால் பலரும் குழம்பிபோன நிலையில், திரண்டு வந்து பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இந்த முறை குறைந்தது 25 சீட்டுகளையாவது வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்திலும் முனைப்பிலும் பாஜக உள்ளதாக தெரிகிறது.. அந்தவகையில், குறிப்பிட்ட சில தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் சைலண்ட்டாக வேகம் எடுத்துள்ளன..
அதிமுக மேலும் பலவீனப்பட்டுள்ள நிலையில், கட்சியே 4 ஆக உடைந்துள்ளது.. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்து அவரை எடப்பாடி பழனிசாமி அரவணைத்து செல்வாரா? என்பது சந்தேகமாகவே உள்ளது..

மதில் மேல் பூனையாக பாஜக.. 'சுத்து’ போடும் ஓபிஎஸ், ஈபிஎஸ்! டெல்லியில் திரளும் லீடர்கள்!மதில் மேல் பூனையாக பாஜக.. 'சுத்து’ போடும் ஓபிஎஸ், ஈபிஎஸ்! டெல்லியில் திரளும் லீடர்கள்!

பிடிவாதம்

பிடிவாதம்

இப்போது போலவே பிடிவாதம் தொடர்ந்தால், எடப்பாடி டீம் இல்லாமலேயே 3வது அணி அமைத்து பாஜக போட்டியிட்டாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.. காரணம், எடப்பாடி பொறுப்பில் இருந்தவரை, பாஜகவுக்கு பெருமளவு சீட்டுகளையோ, தொகுதிகளையோ தந்ததில்லை.. மறைமுக எதிர்ப்பு அரசியல் காரணமாக பாஜகவுக்கான ஓட்டுக்களும் குறைந்துவிட்டதாகவே பாஜக நினைக்கிறது. எனவே 3வது அணி அமைக்கவும் வாய்ப்புள்ளது என்றாலும், முடிந்தவரை எடப்பாடி தரப்பை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி வருகிறது.

அதிருப்தி

அதிருப்தி

மற்றொருபக்கம், தமிழகத்தில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அடிக்கடி சொல்லி வருகிறார். இது அதிமுகவுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது.. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகுமா? அல்லது உடையுமா? என்ற சந்தேகங்கள் நிலவிவருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது.. இதில், எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிட தயாராகிவிட்டது.. ஓபிஎஸ் இன்றும் அதுகுறித்த ஆலோசனையில் ஈடுபடுகிறார்.. பாஜகவும், தன்னுடைய இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து இன்றைய தினம் தன்னுடைய முடிவை அறிவிக்க உள்ளதாக தெரிகிறது.

ஈஸ்வரன் நறுக்

ஈஸ்வரன் நறுக்

கடந்த 2 நாட்களாகவே, பாஜக சார்பில் அக்கட்சி தலைவர் அண்ணாமலையே போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கும், தலைமை அனுமதித்தால் போட்டியிடுவேன் என்றும் அண்ணாமலை விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார்.. இதையடுத்து, கொங்கு ஈஸ்வரன், காயத்ரி ரகுராம் உட்பட பலரும் திரண்டு வந்து, "முடிந்தால் அண்ணாமலை பெற்று காட்டட்டும் பார்க்கலாம்" என்று சவால் விடுத்து வருகிறார்கள்.. அந்தவகையில், அதிமுக ஆதவராளரான கிஷோர் கே சாமியும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..

சப்பைகளா

சப்பைகளா

"நரேந்திர மோடி அவர்களே பிரச்சாரம் செய்து அண்ணாமலையே போட்டியிட்டாலும் ஈரோடு கிழக்கில் 5000 வாக்குகள் தேறாது என்பது தான் எதார்த்த உண்மை, யார் என்ன கம்பு சுத்தினாலும், எதார்த்தத்தை மறுக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.. கடந்த சில நாட்களாகவே, அண்ணாமலை மீது நேரடி பாய்ச்சலில் கிஷோர் கே சாமி இறங்கி வருகிறார்.. 2 நாட்களுக்கு முன்புகூட, 2 ட்வீட்களை பதிவிட்டிருந்தார்.. அதில், "கமலாலயத்தில் நடந்த கட்சிக்கூட்டத்தில் மத்தியில் இரட்டை இலையை முடக்கி விடுவேன், எடப்பாடியாரை ஒருமையில் பேசி, காலி செய்துவிடுவேன் என்றெல்லாம் அண்ணாமலை பேசியதை வேடிக்கை பார்க்க அண்ணா திமுகவினர் சப்பைகளா ??? என்று கேள்வி எழுப்பியிருந்தார் கிஷோர் கே சாமி.

காலி பண்ணிடுவேன்

காலி பண்ணிடுவேன்

அதேபோல, இன்னொரு பதிவில், இரட்டை இலையை முடக்குவேன் , எடப்பாடியாரை காலி பண்ணிடுவேன்னு கமலாலாயத்துல பூட்டின கதவுக்குள்ள சுடக்கு போடக்கூடாது மிஸ்டர் அண்ணாமலை, முதுகெலும்பிருந்தால் துணிச்சலா பொதுவெளியில் சொல்லணும், சொல்லிட்டு நீங்க தேர்தலில் டெப்பாசிட் வாங்கி காட்டுங்க, திறந்த நிலை சவால்" என்று பதிவிட்டிருந்தார். கிஷோர் கே சாமியின் இந்த 2 ட்வீட்களும் பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெருத்த பரபரப்பையும் சலசலப்பையும் உண்டுபண்ணி வந்த நிலையில், இன்றைய தினம், இன்னொரு ட்வீட்டையும் பதிவிட்டு, அண்ணாமலையை விமர்சித்திருப்பது, மேலும் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

English summary
kishore k samy indirectly supports aiadmk and attacked tamil nadu bjp leader annamalai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X