கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு ஆதரவாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
சென்னை: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் விதமாகவும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயதாகும் பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக 33 வயதாகும் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை உடனே தூக்கிலிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இந்த விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் மருத்துவர்களிடம் விசாரணையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தியதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பினார்கள்.
இதேபோல் ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலும் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். நாகலாந்தில் உள்ள NSUI அமைப்பு மெழுகுவர்த்தி ஏந்தி தனது எதிர்ப்பை பதிவு செய்தது. ராஜஸ்தானில் பாஜக அமைப்பினரும் மெழுகுவர்த்தி ஏந்தி போராடினார்கள். பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷில் டாக்டர் மற்றும் நர்சிங் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து குரல் எழுப்பினார்கள். இதேபோல் நாட்டின் பல்வேறு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கொல்கத்தா மாணவிக்கு ஆதரவாக மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்கள்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications