“திமுகவினரை குறிவைத்து அடிக்க பாஜக தயாராகிவிட்டது.. முதல் பலி நான்”.. அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
சென்னை: "திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. முதல் பலி நானாகி விட்டேன்.. எது வந்தாலும் நிற்போம் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுந்திருக்க வேண்டுமே தவிர விட்டு விட்டு போகக்கூடாது" என திருவாரூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, பாஜக திமுகவினரை குறிவைத்து தாக்குவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், எந்தத் தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், பந்து போல மீண்டும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். இந்தக் கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பிடிஏ முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, "திமுக கூட்டணியில் இருந்து யாரும் வெளியேறவில்லை. ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் பாமக இரண்டாகப் பிரிந்துள்ளது. தேமுதிக வெளியேறிவிட்டது. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றோர் பல பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். திமுக ஒற்றுமையாக இருக்கிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இரண்டாவது முறையாக முதல்வராக்குவது திமுகவினரின் கடமை. இது அவருக்காகவோ, கழகத்திற்காகவோ அல்லாமல், பொதுமக்களின் நன்மைக்காகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து கிடைப்பதற்காகவும் செய்யப்பட வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் சரியாகச் செயல்பட்டால் பாதி வெற்றி உறுதி செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதில் முதல் பலியாகத் நானாகிவிட்டேன். இருப்பினும், எந்தத் தாக்குதலையும் எதிர்கொண்டு நிற்போம். அடிக்க அடிக்க பந்து மாதிரி எழ வேண்டும் துவண்டு விடக்கூடாது" என்று பேசி உள்ளார்.
தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் அனுப்பியது. அதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளில் 2,538 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றுள்ளது.
அதில், ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்காக சில செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களும் அவர்களது நெருங்கிய தொடர்புடையவர்களும் தேர்வு செயல்முறையை முறைகேடாக மாற்றி, 2025 ஆகஸ்டில் குறைந்தது 150 தேர்வர்ளுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது, இந்த முறைகேடு தெரியவந்ததாகவும் அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் கே.என்.நேரு இவ்வாறு பேசியுள்ளார்.
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு ரெடி.. “குறுக்க யாரும் வந்துடாதீங்க”.. அறிவிப்பில் வந்த எச்சரிக்கை! -
"ரூ.30 லட்சம் வரை கடனுதவி".. சிறுபான்மையினரை கவர திமுக தேர்தல் அறிக்கையில் டாப் 10 அறிவிப்பு -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
முட்டி மோதியும் கண்டுகொள்ளாத திமுக, அதிமுக.. 4 தொகுதிகளில் மன்சூர் அலிகான் தனித்துப் போட்டி!












Click it and Unblock the Notifications