இடி மின்னலுடன் 3 நாட்களுக்கு கொட்டப்போகும் கோடை மழை..சென்னையில் சட்டென்று மாறிய வானிலை
வெப்ப அலை வீசும் என்று அஞ்சி வந்த நிலையில் கோடை மழை பெய்து வானிலையை சட்டென்று மாற்றி மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நல்ல செய்தி கூறி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது வானிலை ஆய்வு மையம்.
தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு அபரிமிதமாக பெய்தது. அதைத்தொடர்ந்து வடகிழக்குப் பருவமழையும் நல்ல முறையில் பெய்து ஏரி, குளங்களை நிரப்பியது. பல ஊர்களிலும் நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் கோடை வெப்பம் வாட்டி வதைத்தாலும் குளிர்ந்த காற்று வீசுகிறது.
பிப்ரவரி மாதம் பிற்பகுதி முதலே வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. மார்ச் மாதம் முதலே வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது.

வானிலையில் மாற்றம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே வானிலையில் புதிய மாற்றம் உருவாகியுள்ளது. மாலை நேரங்களில் இடியும் மின்னலுமாய் கோடை மழை தென் மாவட்டங்களில் பெய்யத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை மாலை பல ஊர்களில் மழை கொட்டித்தீர்த்தது. வெயிலுக்கு இதமாக பெய்த மழையை பலரும் ஆனந்தமாக அனுபவித்தனர்.

கோடை மழை
இது கோடை மழை என்று வானிலை ஆய்வு மையம் கூறிய நிலையில் இந்த மழை மேலும் 3 நாட்களுக்கு சில இடங்களில் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசும் போது, தென் தமிழகம் முதல் மத்திய பிரதேசம் வரை வடக்கு, தெற்காக கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற பகுதி வளிமண்டலத்தில் நிலவி வருகிறது.

3 நாட்களுக்கு மழை
இன்று முதல் 20ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை கோடை மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கிறது. சென்னை, புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில் அடுத்த 2 தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலை எப்படி
மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் சேர்ந்தது தான் கோடை காலம். இந்த காலகட்டத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகமாகவும், இரவு நேர வெப்பநிலை குறைவாகவும் இருக்கும். இந்த கோடை காலத்தில் கடலோர மாவட்டங்களில் இயல்பை விட சற்று அதிகமாகவும், உள் மாவட்டங்களில் இயல்பையொட்டியும் வெப்பநிலை பதிவாகும் என்று கூறியுள்ளார்.

சென்னையில் மாறிய வானிலை
சென்னையில் பகல் வேளையில் கடும் வெயில், இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் குளிர் என்று நிலவி வந்தது. கடும் வெயிலால் மக்கள் தவித்து வந்த வேலையில் சென்னையில் நேற்று திடீரென மழை இடி மின்னல், சூறைகாற்றுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, பெருங்குடி உள்பட பல பகுதிகளில் காலை 10 மணி முதல் சாரல் மழை பெய்தது.

இரவில் பெய்த மழை
நேற்று பிற்பகலுக்கு மேல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் இந்த மழை நீடித்தது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது. இதனால் பொதுமக்கள் மழைநீரில் விழுந்த ஆலங்கட்டிகளை கையில் ஏந்தி மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், சென்னையில் நள்ளிரவும் மீண்டும் மழை பெய்தது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இடி மின்னல் கவனம்
கோடை மழை காலத்தில் இடி, மின்னல் அதிகம் தாக்கும். மின்னல் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அறிகுறிகள் ஏதுமின்றி மின்னல் தாக்கும். இடி, மின்னலின் போது திறந்த வெளியில் இருக்க நேர்ந்தால் இரண்டு காதுகளையும் இறுக்கமாக மூடிக் கொண்டு குத்துக்கால் இட்டு அமர வேண்டும். அப்படி அமரும்போது குதிகால்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு இருப்பது மிகவும் அவசியம். தரைக்கு மிகவும் அருகே அமர்ந்து கொண்டிருப்பது அவசியம். அதன் மூலம் மின்னல் தாக்கும் வாய்ப்பு குறையும். காதுகளை இறுக்க மூடிக் கொள்வதால் கேட்கும் திறன் பாதிக்கப்படுவது குறையும். குதிகால்கள் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டு இருந்தால் மின்னல் தரையை தாக்கும் போது ஏற்படும் மின்சாரம் உடலில் பாயாமல் இருக்கும் என பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications