சிபிசிஐடியில் ஆஜர்- எடப்பாடி பழனிசாமி உட்பட 50 பேருக்கு எதிராக கனகராஜ் சகோதரர் தனபால் வாக்குமூலம்?
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் இன்று சிபிசிஐடி முன்பாக ஆஜரானார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாடு பங்களாவில் 2017-ல் கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் நிகழ்ந்தன. இக்கொலை கொள்ளையில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட சிலர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 316 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மொத்தம் 49 பேர் கொண்ட சிபிசிஐடி குழு இந்த விசாரணையை நடத்துகிறது. இந்த வழக்கில் கடந்த வாரம், உதகை நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கனகராஜ் மர்ம மரணம்: இவ்வழக்கில் மர்மமான முறையில் இறந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், ஊடகங்களிடம் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது தனபால் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
தனபால் விவகாரம்: இதனிடையே தனபால் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும், சிபிசிஐடி விசாரணைக்கு செல்ல விடாமல் தம்மை எடப்பாடி பழனிசாமி தரப்பு தடுக்கிறது எனவும் குற்றம்சாட்டி இருந்தார் தனபால்.
50 பேர் மீது புகார்: இந்நிலையில் இன்று சிபிசிஐடி போலீசார் முன்பு ஆஜராகி இருக்கிறார் தனபால். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தனபால், கனகராஜ் என்னிடம் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் 50 பேர் குறித்து இன்றைய விசாரணையில் தெரிவிக்க இருக்கிறேன். கனகராஜூக்கு மது ஊற்றி கொடுத்து தாக்கி கொலை செய்துவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிவிட்டனர். இந்த 50 பேரில் அதிமுகவினர், போலீஸ் அதிகாரிகள் பெயர் இடம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications