Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடநாடு வழக்கு.. எடப்பாடிக்கு ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கொடுக்கனும்.. தனபாலுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு தனபால் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

edappadi palaniswami kodanadu case madras high court

எடப்பாடி மனு: இதையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால், தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றம் உத்தரவு: வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகைபாலன், எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்து, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்தது உத்தரவிட்டார். மேலும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை எடப்பாடி பழனிசாமிக்கு மான நஷ்டஈடாக வழங்கவும் தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை: நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது ஓய்வு எடுக்க செல்வதுண்டு. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி இந்த எஸ்டேட்டில் கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. மேலும் அங்கிருந்த முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.

அடுத்தடுத்து மர்ம மரணம்: இந்த கொள்ளையின் போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அதுமட்டும் இன்றி கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி அடுத்தடுத்து மர்ம மரணங்கள் ஏற்பட்டதால் இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனபால் கைது: கொடநாடு கொலை கொள்ளை குறித்த விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கைது செய்யபட்டார்.

மான நஷ்ட ஈடு வழக்கு: அதன்பிறகு ஜாமீனில் வெளி வந்த தனபால், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை இந்த கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்பு படுத்தி பேசினார். இதற்கு எதிராகத்தான் எடப்பாடி பழனிசாமி மானநஷ்ட ஈடு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் தான் நீதிமன்றமும் தனபாலுக்கு எதிராக தீர்ப்பு கூறியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+