கோடநாடு எஸ்டேட் வழக்கு விஸ்வரூபம்.. கொலைகள் பின்னணியில் அதிமுக "முக்கிய புள்ளி.." சயன் வாக்குமூலம்
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, கைது செய்யப்பட்டிருந்த சயானிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அதிமுக முக்கிய புள்ளி ஒருவர் பெயரை அவர் வெளியிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Recommended Video
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இதன் மொத்த மதிப்பு 2 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்று கூறப்படுகிறது.
முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலகட்டங்களிலும் அவ்வப்போது இந்த எஸ்டேட் சென்று ஓய்வு எடுப்பது ஜெயலலிதா வழக்கம்.

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை
ஜெயலலிதா மறைந்த பிறகு, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா 4 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி, கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் அந்த எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேரளா மாநிலத்தை சேர்ந்த சயான், மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தின்ராய், திபு, சதீசன், சம்சீர்அலி, பிஜின், சந்தோஷ்சாமி, உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஜெயலலிதா கார் டிரைவர்
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்ததால், போலீசார் அவரை தேடினர். இந்த நிலையில், 2017ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். மேலும், கோடநாடு எஸ்டேட்டில் கணினி ஆப்ரேட்டராக பணிபுரிந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணங்கள் நிகழ்ந்ததால், பெரும் பரபரப்புக்கு காரணமானது இந்த வழக்கு.

பரபரத்த வழக்கு
இப்போது இவ்வழக்கு, கோத்தகிரி நீதிமன்றத்தில் இருந்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சயான், மனோஜ் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்கள் ஊட்டியில் இருந்து வரும் நிலையில், 8 பேர் ஜாமீனில் உள்ளனர். இந்த நிலையில் சயானிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.

வாக்குமூலம்
மாவட்ட முதன்மை நீதிபதியிடம் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோத்தகிரி போலீசார் நீதிமன்ற அனுமதி பெற்று சயானிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பினர். நேற்று ஊட்டியில் நில அபகரிப்பு தடுப்பு தனி பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சயானிடம் நீலகிரி போலீஸ் எஸ்.பி. ஆஷிஷ் ராவத், குன்னூர் டி.எஸ்.பி. சுரேஷ், விசாரணை அதிகாரியான கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

அதிமுக முக்கிய புள்ளி
மாலை 3.30 மணி முதல் தொடர்ந்து 3 மணி நேரம் சயானிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜிடம் இருந்து கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன சில முக்கிய ஆவணங்களை அதிமுகவின் "முக்கிய புள்ளியிடம்" கொடுத்ததாகவும், கொலை வழக்கில் கூடலூர் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதிமுக அதிர்ச்சி
விசாரணை மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதால் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் சயன் கொடுத்த வாக்குமூலத்தில் அதிமுகவின் மிக முக்கிய புள்ளி பெயர் இடம் பெற்றுள்ளது. இதை சில பிரபல நாளிதழ்களும் உறுதி செய்துள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவலாக போலீஸ் இதை வெளியிடவில்லை என்பதால் அந்த தலைவரின் பெயரை இப்போதைக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்பது காவல்துறை கோரிக்கையாக உள்ளது.

சட்டசபையில் போராட்டம்
இதனிடையே, கோடநாடு கொலை, கொள்ளை விவகார விசாரணை தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் அதிமுக அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தது. அவர்கள் 'பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம்' என்று எழுதப்பட்ட வாசகங்களுடன் அவைக்கு வந்திருந்தனர். பின்னர் பேரவை வாயிலில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக, எதிர்க்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் பேச அனுமதி கொடுத்தேன்; ஆனால் அனுமதியில்லாமல் பதாகைகளை ஏந்தி வந்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அதிமுகவினரை கடிந்து கொண்டார் சபாநாயகர் அப்பாவு.
-
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை












Click it and Unblock the Notifications