Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

4 பக்கம் வைக்கப்பட்ட செக்.. கிரீன்சிக்னல் தந்த உச்சநீதிமன்றம்.. கோடநாடு கேஸில் இபிஎஸ்சுக்கு சிக்கலா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடிக்கு எதிராக நகர்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Recommended Video

    Kodanadu விவகாரம் : Edappadi தரப்புக்கு எதிராக நிற்கும் சிக்கல்கள்

    கோடநாடு வழக்கில் மேல் விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த வழக்கில் சாட்சியங்களிடம் மீண்டும் வாக்குமூலம் பெற்று விசாரணை செய்ய தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டியது. ஆனால் இந்த மேல் விசாரணைக்கு அதிமுக தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கில் இனியும் மேற்கொண்டு விசாரணை செய்ய கூடாது.

    வழக்கு விசாரணை முடிந்துவிட்டது. விசாரணை முடியும் தருவாயில் மேற்கொண்டு வாக்குமூலம் பெறுவது என்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக குறிப்பிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த ரவி என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

    வழக்கு

    வழக்கு

    ஆனால் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த அனுபவ் ரவி என்பவர் கோடநாடு வழக்கில் சாட்சியமாக இருக்கும் ஒருவர். இவர் தனக்கு இந்த வழக்கில் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், போலீசார் தன்னிடம் விசாரணை என்று மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்பதாகவும், தனது உயிருக்கு ஆபத்து உள்ளது, ஏற்கனவே முடிந்த வழக்கில் மீண்டும் மேல் விசாரணை நடத்துகிறார்கள். இது தவறு. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

    தள்ளுபடி

    தள்ளுபடி

    இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பளித்த நீதிபதி நிர்மல்குமார், வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும். வழக்கு விசாரணையை தாமதபடுத்தினாலும் உண்மையை கண்டறிவதில் உதவியாக இருக்கும்.தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களையும், விவரங்களையும் வைத்து பாரபட்சமற்ற விசாரணையை தொடர எவ்வித தடையும் இல்லை.காவல்துறை தாக்கல் செய்யும் ஆவணம் மற்றும் அறிக்கையை ஏற்பதா வேண்டாமா என நீலகிரி நீதிமன்றம் முடிவு செய்யும். அதனால் மேல் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.

    மேல்முறையீடு

    மேல்முறையீடு

    இந்த நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற படியேறினார் ரவி. இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றத்தில் வைத்த அதே வாதத்தை ரவி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வைத்தது. இதில் நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான முகாந்திரம் இருப்பது போல தெரியவில்லை. வழக்கிற்கான நோக்கம் தெளிவாக இல்லை. கோடநாடு வழக்கு முக்கியமானது போல தெரிகிறது. இதில் நாங்கள் தலையிட முடியாது. விசாரணை மூலம் மட்டுமே உண்மைகளை கொண்டு வர முடியும். இதில் மேல் விசாரணை நடத்த தடைவிதிக்க முடியாது, என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    மூன்று

    மூன்று

    மிக முக்கியமாக உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்சித்தார்த் லூத்ரா இன்று அனுபவ் ரவி சார்பாக ஆஜராகியும் கூட இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு தடை வாங்க முடியவில்லை. போலீஸ் விசாரணை நடத்துவது தவறு இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளது. இந்த வழக்கில் மேல் விசாரணைக்கு அதிமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இப்போது உச்ச நீதிமன்றம் கொடுத்த இந்த அனுமதி அதிமுகவிற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடியாக வந்துள்ளது.

    நான்கு விஷயங்கள்

    நான்கு விஷயங்கள்

    முக்கியமாக நான்கு விஷயங்கள் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பி உள்ளது. முதல் விஷயம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயான் கொடுத்த வாக்குமூலம். இவரின் வாக்குமூலம்தான் இந்த வழக்கில் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியது. இரண்டாவது விஷயம், மேல் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் இதில் கூடுதல் சாட்சியங்கள் சேர்க்கப்பட்டு விசாரணைகள் துரிதமாகும். எடப்பாடி பழனிசாமியிடம் கூட விசாரணைகள் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன (இதற்கு எதிராக வேறு வழக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ளது).

    சிக்கல் மேல் சிக்கல்

    சிக்கல் மேல் சிக்கல்

    மூன்றாவதாக, இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதால் ஆதாரங்கள், சாட்சியங்கள் வேகமாக திரட்டப்பட்டு வருகின்றன. 60 நாட்களில் வழக்கு விசாரணையை முடிக்கலாம் என்ற முடிவில் தமிழ்நாடு அரசு உள்ளது. வழக்கில் வரும் நாட்களில் இதனால் அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே தனிப்படை கேரளா சென்று சயான் மனைவி மகன் மரணம், கனகராஜ் மரணம் குறித்து விசாரிக்கிறது. இதில் யாரவது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தால், வாயை திறந்தால் அது எடப்பாடிக்கு மேலும் சிக்கலில் முடியும்.

     கடைசி சிக்கல்

    கடைசி சிக்கல்

    இதெல்லாம் போக ஊட்டி கோர்ட்டில் இன்னும் ஒரு மாதத்தில் வழக்கு விசாரணை நடக்க உள்ளது. இனியும் பெரிதாக அதில் வாய்தா வழங்கப்படாது என்பதால் கண்டிப்பாக அடுத்த அமர்வில் சயானின் வாக்குமூலம் மீதான விசாரணை நடக்கும். இந்த வாக்குமூல விவரங்கள் அடுத்த மாதம் வெளியே வந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய சிக்கலில் முடியும் வாய்ப்புகளும் உள்ளன. கோடநாடு வழக்கில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் எல்லாம் எடப்பாடியை நோக்கி திரும்புவது அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+