கொல்லிமலை மிளகு.. நெல்லை அவுரி.. 10 வேளாண் பொருட்களுக்கு ரூ.30 லட்சம் செலவில் புவிசார் குறியீடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை ஏற்றுமதி அளவு அதிகரிக்கும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு கொல்லிமலை மிளகு, சத்தியமங்கலம் செவ்வாழை, நெல்லை அவுரி உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு ரூ.30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண்மைத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டார்.

Kollimalai pepper Nellai Auri..Rs.30 lakh fund allot to get geographical codes for 10 agricultural products

அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நேரடி விற்பனை நிலையங்கள் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு. விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு.

செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு. மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம். சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி ஒதுக்கீடு.

புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு. புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு. 10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் ஒதுக்கீடு.

ரூ.32.90 கோடி மானியத்தில் 207 தனியார் வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். உதகை ரோஜா பூங்காவில் 100 புதிய ரோஜா வகைகள் நடவு செய்யப்படும். விவசாயிகள் சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்திட ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
தென்காசி மாவட்டம் நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்படும்.

புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை, ஏற்றுமதி அளவு அதிகரிக்கும். எனவே நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான 25 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல 2024-25ஆம் ஆண்டில் சத்திய மங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பா, ஐயம்பாளையம் நெட்டை தென்னை, உரிகம்புளி, புவனகிரி மிதி பாகற்காய், செஞ்சோளம், திருநெல்வேலி அவுரி இலை, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, செங்காந்தள் கண்வலி விதை ஆகிய 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெறப்படும் என்றும் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+