செந்தில் பாலாஜி இல்லாத நேரம் பார்த்து.. இப்படியா பண்ணனும்.. திமுக எடுத்த முடிவு.. கொங்கில் திடுக்
சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு குழுக்களை திமுக மற்றும் அதிமுக தலைமை நியமித்து அந்த பணிகள் தொடங்கி விட்டன. தேர்தல் பணிகளுக்காக அமைக்கப்பட்ட இந்த குழுக்கள் குறித்துதான் திமுகவில் சர்ச்சைகள் வெடிக்கிறது.
லோக்சபா தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர்.அதேபோல் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர். பூத் கமிட்டி சார்பாக வாக்காளர்களை சந்திக்கும் பணிகளை திமுக தொடங்கவிட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடன்உடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய குழு அமைத்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை செய்ய உள்ள குழுவில் குழு தலைவராக டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார்.
குழு உறுப்பினர்கள் : கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்), இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்), ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) , எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இரண்டாவது குழு: நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல் மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான 'தேர்தல் அறிக்கை தயாரிப்பு' குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைவராக . கனிமொழி கருணாநிதி எம்.பி., (கழகத் துணைப் பொதுச் செயலாளர்) நியமிக்கப்பட்டு உள்ளார்.
மூன்றாவது குழு: டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்புத் தலைவர்), ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்), டி.ஆர்.பி.இராஜா (கழகத் தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர்), கோவி.செழியன் (கழக வர்த்தகர் அணி துணைத் தலைவர்), கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., (கழக மாணவரணிச் செயலாளர்), எம்.எம்.அப்துல்லா எம்.பி., (கழக அயலக அணிச் செயலாளர்), மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., (கழக மருத்துவ அணிச் செயலாளர்), மேயர் பிரியா ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின்: இதுதான் மேற்கு மண்டலத்தின் பொறுப்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது. திமுகவின் மேற்கு மண்டல பிரதிநிதியாக களமிறங்குகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சர்ச்சை: தேர்தல் பணிகளுக்காக அமைக்கப்பட்ட இந்த குழுக்கள் குறித்துதான் திமுகவில் சர்ச்சைகள் வெடிக்கிறது.
குறிப்பாக, திமுக பலகீனமாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் தான் இந்த சர்ச்சையும் அதிர்ப் திகளும் பெரிய அளவில் வெடித்துக்கொண்டிருக்கிறது. அதாவது, அதிமுக வில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழுக்களில், கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த செங்கோட்டையன், பொன்னையன், தம்பிதுரை, தங்கமணி, வேலுமணி ஆகிய 5 பேருக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. ஆனால், திமுகவில் அமைக்கப்பட்ட குழுக்களில், கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வாய்ப்புத் தரப்படவில்லை.
இதனால், கொங்கு மண்டல திமுகவில் உள்ள கொங்கு வேளாள கவுண்டர்கள் சமூகத்தினரிடம், '' கொங்கு மண்டலத்தில் அதிமுகவை ஒப்பிடுகிற போது திமுகவிற்கு செல்வாக்கு குறைவு தான். இதற்கு பல காரணங்கள் உண்டு. அதேசமயம், செந்தில்பாலாஜியிடம் பொறுப்புக் கொடுத்தப்பிறகு, திமுக கொங்கு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக பரபரப்பானது. அவர் சிறைக்கு சென்றபிறகு மீண்டும் சரிவை சந்தித்து வருகிறது திமுக. இந்த நிலையில், தேர்தல் பணிக்குழுக்களில் கொங்கு கவுண்டர்களுக்கு கட்சி தலைமை வாய்ப்பு தரவில்லை.
இப்படி எங்கள் சமூகத்தினரை புறக்கணித்தால் கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் நாங்கள் எப்படி எம்மக்களை சந்தித்து அரசியல் பேச முடியும் ? தேர்தல் பணிகளை முன்னெடுக்க முடியும் ? இத்தனைக்கும், திமுகவின் எதிரிக்கட்சிகளான அதிமுகவின் பொதுச்செயலாளரும், பாஜகவின் தலைவரான அண்ணாமலையும் கொங்கு வேளாள கவுண்டர்கள்.
அந்த கட்சிகளை வீழ்த்த அல்லது அவர்களுக்கான கவுண்டர்களின் ஆதரவை சிதறடிக்க வேண்டுமானால் திமுகவில் உள்ள கொங்கு கவுண்டர்களுக்கு முக்கியத்துவம் தந்தால் தானே தேர்தல் நேரத்தில் அவர்களுக்கான ஆதரவை திசை திருப்ப முடியும்? திமுகவில் உள்ள எங்களை புறக்கணிக்கும் போது, எம்மக்களும் திமுகவை எப்படி கண்டு கொள்வார்கள் ? அதனால், திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூகத்துக்கு வாய்ப்பளிக்க தலைமை ஆலோசிக்க வேண்டும்'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
தேர்தல் காலத்தில் பெரும்பான்மை சமூகத்தை புறக்கணிப்பது திமுகவின் யுக்திக்கு மேற்கு மாவட்டங்களில் சரிவையே கொடுக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications