சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாயத்தோற்றத்தை உருவாக்கும் மத்திய பட்ஜெட்! இன்னும் எதிர்பார்த்தோம்! ஏமாற்றமே மிச்சம் -கொங்கு ஈஸ்வரன்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கையானது அடுத்த ஆண்டு வர இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் பற்றி ஈஸ்வரன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

விவசாயிகள், ரயில்வே கட்டமைப்பு, புதிய விமான நிலையங்கள், தனிநபர் வருமான வரி வரம்பு உயர்வு போன்றவற்றை வரவேற்கின்றேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன் அளிக்கக் கூடியதாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது.

Kongunadu makkal desiya katchi general secretary Eswaran opinion about Union budget 2023

செலவுக்கு தகுந்த வருமானம் இல்லை என்பது கவனிக்க வேண்டியது. அதிகமாக கூடுதல் கடன் வாங்குகின்ற திட்டத்தோடு தயாரிக்கப்பட்டு இருக்கின்ற நிதிநிலை அறிக்கையாக பார்க்கிறோம்.

மக்களுக்கான அரசின் திட்டங்களை கொண்டு போய் சேர்ப்பதற்கான யுக்திகள் தெரிவிக்கப்படவில்லை. அதில் மாநில அரசுகளுடைய பங்கு தெரிவிக்கப்படவில்லை. மாநில சுயாட்சி கேள்விக்குறியாவதற்கான வாய்ப்புகள் தென்படுகிறது.

தொழில் வியாபார வளர்ச்சிக்கான அறிவிப்புகள் எதிர்பார்த்த அளவு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. போன நிதிநிலை அறிக்கையில் இல்லாமல் 3.5 லட்சம் கோடிக்கான அறிவிப்புகள் பிரதமரால் அறிவிக்கப்பட்டது.

திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அது தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதுபோல இந்த நிதிநிலை அறிக்கையில் தெளிவுபடுத்தப்படாத பல அறிவிப்புகளை பிரதமர் வெளியிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

டிஜிட்டல் நூலகம்.. சபாஷ்! ஆனா.. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத பட்ஜெட் : விஜயகாந்த்டிஜிட்டல் நூலகம்.. சபாஷ்! ஆனா.. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத பட்ஜெட் : விஜயகாந்த்

English summary
Kongunadu makkal desiya katchi general secretary Eswaran opinion about Union budget 2023
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X