சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னைக்கு சூப்பர் அங்கீகாரம்.. கோவளம், ஈடன் பீச்களுக்கு நீலக்கொடி சர்ட்டிபிகேட்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவளம் கடற்கரைக்கு Blue flag (நீலக் கொடி) சான்று கிடைத்துள்ளது. அது போல் புதுவையில் ஈடன் கடற்கரைக்கும் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

டென்மார்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அமைப்பானது இந்த நீலக் கொடி சான்றிதழை வழங்கி வருகிறது. இந்த சான்றிதழானது சுற்றுச்சூழல் மேலாண்மை, நீரின் தரம், நீல நிறம், பாதுகாப்பு, குளிக்க தகுந்த சுகாதாரமான நீர் உள்ளிட்ட 33 அம்சங்களை கொண்டு வழங்கி வருகிறது.

இந்த சான்றிதழ் பெற்றால் அந்த கடற்கரை உலகில் அழகான கடற்கரை மற்றும் சுத்தமான கடற்கரை என்பது பொருள்படும். அந்த வகையில் ஏற்கெனவே உலகில் இந்த சான்றிதழ்களை பெற்ற கடற்கரைகளின் பட்டியலை பார்ப்போம்.

'இந்த லிங்கை மட்டும் தொட்டுவிடாதீர்கள்'.. டேட்டிங் முதல் வேலை வரை.. திகைக்க வைக்கும் சம்பவங்கள்!'இந்த லிங்கை மட்டும் தொட்டுவிடாதீர்கள்'.. டேட்டிங் முதல் வேலை வரை.. திகைக்க வைக்கும் சம்பவங்கள்!

போர்ச்சுக்கல்

போர்ச்சுக்கல்

கிரீஸ் நாட்டில் உள்ள தாசோஸ் கடற்கரை, போர்ச்சுகலில் உள்ள பிரையா டா ரோச்சா பைஸின்ஹா கடற்கரை, துருக்கியில் கபூடா கடற்கரை, பிரான்ஸில் பாலோபாகியா கடற்கரை, ஸ்பெயினில் உள்ள கடற்கரை, இத்தாலியில் உள்ள ஸ்பாடார்னோ உள்ளிட்ட கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தமட்டில்

இந்தியாவை பொருத்தமட்டில்

இந்தியாவை பொருத்தமட்டில் 8 கடற்கரைகளுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது. குஜராத்திலிருந்து ஷிவ்ராஜ்பூர், டையுவில் கோக்லா, கர்நாடகாவில் காசர்கோடு, படுபித்ரி. கேரளாவில் கப்பாட், ஆந்திராவில் ருஷிகோண்டா, ஒடிஸாவில் கோல்டன், அந்தமான் மற்றும் நிகோபார் தீவில் ராதாநகர் ஆகிய 8 கடற்கரைகளுக்கு நீலக் கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

புதுவை

புதுவை

இந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுவையில் 2 கடற்கரைகளுக்கு நீலக் கொடி அங்கீகாரம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கோவளம் கடற்கரைக்கும் புதுவையில் ஈடன் கடற்கரைக்கும் அந்த சான்றிதழ் கிடைத்துள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் புபேந்திர யாதவ், தனது ட்விட்டரில் கூறுகையில் சர்வதேச ப்ளூ ஃபிளாக் சான்று பட்டியலில் கோவளம், ஈடன் கடற்கரைகளுடன் சேர்த்து இந்தியாவில் தற்போது 10 கடற்கரைகள் உள்ளன.

கோவளம் பீச்

கோவளம் பீச்

இது பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். கோவளம் கடற்கரை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இது மீன்பிடித் தொழிலுக்கு பிரபலமானதாகும். இந்தியாவின் முதல் நீர் சறுக்கு பகுதி இதுவாகும். இங்கு நீர் சார்ந்த விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.

சின்ன வீராம்பட்டினம்

சின்ன வீராம்பட்டினம்

புதுவை சின்ன வீராமபட்டினத்தில் உள்ளது ஈடன் கடற்கரை. இந்த கடற்கரைக்கு ப்ளூ ஃபிளாக் கிடைக்க கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பகுதி பிளாஸ்டிக் இல்லா பகுதியாக மாற்றப்பட்டது. அது போல் இந்த கடற்கரையில் பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கடலில் மூழ்கி யாரும் இறக்காத வண்ணம் உயிரை காக்கும் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

English summary
Centre says Tamilnadu's Kovalam and Pondicherry's Eden beach gets Blue flag certificate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X