வேற மாதிரி அதிரடி.. அப்பதான் குறுக்கே வந்த மாடுகள்! கோயம்பேடு மார்க்கெட்டில் ஸ்பாட்டிலேயே வந்த சபாஷ்
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் புதிய அதிரடிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இது பொதுமக்கள் தரப்பில் பெருத்த வரவேற்பினை பெற்று வருகிறது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவிலான சந்தை என்றழைக்கப்படுவது சென்னை கோயம்பேடு மார்க்கெட்தான்.. காரணம், இங்கு 1000-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக்கடைகள், 2000-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் என பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகின்றன.

பரபர மார்க்கெட்: எனவே, இங்கு தினமும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வந்து குவிந்து வருவதால், இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் விற்பனை நடக்கிறது..
அதற்கேற்றவாறு கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் ஒழுங்குமுறைகளை மீறுவோர் மீதும் அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. சமீபத்தில்கூட, உரிமம் புதுப்பிக்காமல் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருவதாக அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன....
அதிரடி சீல்: இதையடுத்து, கோயம்பேடு காய்கறி, பூ மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்க தவறிய 30 கடைகளுக்கு அங்காடி நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டது.. இப்போது இன்னொரு பிரச்சனை கிளம்பியிருக்கிறது.. கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலம் விடப்படும், என்று கோயம்பேடு அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு காரணம், மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை செய்ததுபோக மீதமாகும் காய்கறிகள், பழங்கள் ஆகியவை மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கப்படுகிறது.. இந்த காய்கறி, பழம் கழிவுகளை ஏராளமான கால்நடைகள் சாப்பிட வருகின்றன.. அப்போது பொதுமக்களுக்கும், வியாபாரிகளும் இவைகள் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.. அதிலும் சில மாடுகள், மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களை விரட்டிச் சென்று முட்டுகிறது. இதனால் பலரும் காயமடைகிறார்கள்.
மதுரவாயல்: அதனால்தான், மதுரவாயல், பூந்தமல்லி பிரதான சாலைகள், கோயம்பேடு மார்க்கெட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும், என்று கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்..
இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட், மதுரவாயல், பூந்தமல்லி பிரதான சாலைகளில் சுற்றித்திரிந்த 20க்கும் மேற்பட்ட கால்நடைகளை அங்காடி நிர்வாகத்தினர் பிடித்தனர்.. அதன் உரிமையாளர்களுக்கு அபராதமும் விதித்தனர்.
அபராதம்: இனிமேல், மார்க்கெட் வளாகத்திற்குள் மாடுகள் வந்தால் ஏலம் விடப்படும், என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.. இதுவரைக்கும், கோயம்பேடு சாலையில் சுற்றித்திரிந்த 175 மாடுகள் பிடிக்கப்பட்டு, 3.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications