கோயம்பேடு காலி.. ஷிப்ட் ஆன ஆம்னி.. முற்றுப்பெறும் முடிச்சூர் பஸ் ஸ்டாண்டு பணிகள்.. அரசின் குட்நியூஸ்
சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு மாறுதலுக்கு பிறகு, முடிச்சூர் பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ்களுக்கான பேருந்து நிலையம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இதுகுறித்து புதிய தகவலை தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்பட்டதையடுத்து, ஆம்னி பஸ்கள் அனைத்தும் கோயம்பேட்டில் இருந்துதான் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

எங்கே? எப்போது: இதுதொடர்பாக அவர்கள் சொன்னபோது, கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் போதுமான இடவசதிகள் இல்லை. வெறும் 150 பேருந்துகள் மட்டுமே நிறுத்துவதற்கு இடம் கொடுத்தால் மொத்தம் ஆயிரம் பேருந்துகளை நாங்கள் எங்கு கொண்டு நிறுத்துவது என கேள்வி எழுப்பியிருந்தனர்?
இதனைத்தொடர்ந்து அமைச்சர்களும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டதால் மக்கள் அனைவரும் எங்கு சென்று ஏறுவது என தெரியாமல் குழம்பி இருந்தனர்.. இதற்கு பிறகே, ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு என்று தனியாக கிளாம்பாக்கத்தில் இருந்தாலும் தனியார் பேருந்து நிறுத்தமானது முடிச்சூரில் அமைக்கப்பட்டு வருகின்றன...
பஸ் ஸ்டாண்டு: 28 கோடி ரூபாய் செலவில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த பஸ் ஸ்டாண்டில், பணிகளும் விறுவிறுப்பாக துவங்கப்பட்டது.. 2024 மார்ச் மாதம் முதல் அங்கிருந்து செயல்படும் எனவும் ஆயிரம் பேருந்துகளும் ஒரே நேரத்தில் அங்கிருந்து நிறுத்தி வைக்கப்படாது, அது தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருப்பதால் அங்கு பேருந்துகளை நிறுத்துவதற்கு பிரச்சனை இருக்காது என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், இந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு, செயலாளர் காகர்லா உஷா, உறுப்பினர் செயலாளர் அன்ஷுல் மிஸ்ரா ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.
வண்டலூர்: அப்போது, சென்னை வண்டலூர் வெளிவட்ட சாலையில் உள்ள மீஞ்சூர் உடற்பயிற்சி பூங்கா, வெள்ளனூர் உடற்பயிற்சி பூங்கா, திருநாகேஸ்வரம் உடற்பயிற்சி பூங்கா, வரதராஜபுரம் உடற்பயிற்சி பூங்கா, முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டு, பணி குறித்த விவரங்கள் மற்றும் பணி எப்போது முடிவடையும் என அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
பிறகு சேகர்பாபு செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "சரியான திட்டமிடல் இல்லாமல் கடந்த ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தேவைப்படுகின்ற பல்வேறு கட்டமைப்புகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம்.
அடுத்த மாதம் அதிரடி: ஆம்னி பஸ்கள் நிறுத்துவதற்கு என தனியாக இடம்வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 42.70 கோடி ரூபாய் செலவில் ஒருமுறை 117 பஸ்கள் நிறுத்தும் அளவிற்கு பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் இந்த பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கை எடுப்பதற்காகவே இப்போது ஆலோசனைகளை நடத்தி வருகிறோம்" என்றார்.
கிளாம்பாக்கத்திலிருந்து 8 கிமீ தூரத்தில் உள்ள முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பில் ஆம்னி பஸ்களுக்கு அனைத்து வசதிகளுடன் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என்று சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு ஏற்கனவே உறுதி அளித்திருந்தது. இப்போது முழுவீச்சில் பணிகள் நடந்து முடிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வளாகம் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி வைப்பதற்கும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்கும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஐடியல் பார்க்கிங் 5 ஏக்கரில் 300 பேருந்துகள் மற்றும் 300 ஊழியர்கள் தங்கும் வகையில் இது கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications