Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேடு காலி.. பஸ் ஸ்டாண்டு போயிடுச்சு.. இப்ப யாரு புதுஸ்ஸா? கோயம்பேட்டில் நடமாடும் உருவம்.. கவனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, வெறிச்சோடி காலியாக உள்ள நிலையில், புது சிக்கல் ஒன்று கிளம்பி உள்ளது.. என்ன அது?

சென்னையில் டிராபிக்கை குறைக்க வேண்டும் என்பதற்காக, கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு விரைவு பஸ்கள் உட்பட ஆம்னி பஸ்கள் எல்லாமே கிளாம்பாக்கத்துக்கு போய்விட்டன.

Koyambedu Bus Stand Demand and Do you know what happened in koyambedu Bus Terminus during night time

எனவே அதனால், பூந்தமல்லி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் குறைந்த எண்ணிக்கையிலான எஸ்இடிசி மற்றும் டிஎன்எஸ்டிசி பஸ்கள் மட்டுமே கோயம்பேட்டில் இயக்கப்பட்டு வருகின்றன.. இந்த பஸ்களும் இரவு நேரத்தில் செல்வதால், பகல் நேரத்தில் கோயம்பேட்டில் கூட்டமே இருப்பதில்லை..

செல்போன்: பஸ் ஸ்டாண்டு முழுவதும் பயணிகள் நடமாட்டம் இல்லை என்பதால், இதுவரை அங்கு செயல்பட்டு வந்த ஓட்டல்கள், டீக்கடைகள், ஸ்நாக்ஸ் கடைகளும் பெரும்பாலும் அடைக்கப்பட்டுள்ளன.. எலக்ட்ரானிக் கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகளிலும் கூட்டம் இல்லை.. மேலும், பிளாட்பார்ம் வியாபாரிகளும், மெல்ல மெல்ல கடைகளை காலி செய்துவிட்டு கிளம்பி வருகிறார்கள்.. இதனால், பஸ் கோயம்பேடு ஸ்டாண்டே காலியாகிவிட்டுது.
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை, சமூக விரோதிகள், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வதாக 2 மாதங்களுக்கு முன்பேயே செய்திகள் வட்டமடிடத்தன. அதாவது, சுற்றுவட்டார பகுதிகளிலிருக்கும் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள் போன்றோர், குற்ற சம்பவங்களை செய்துவிட்டு, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து பதுங்கி கொள்கிறார்களாம்.. போதாக்குறைக்கு மதுப்பிரியர்களும் இங்கேயே குடித்து கும்மாளமிட்டு பதுங்கிவிடுவதாக புகார் கிளம்பியிருந்தது.

மீண்டும் திருட்டு: இந்நிலையில் நேற்றிரவு, ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.. அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் அருகே உள்ள பஸ் ஸ்டாண்டில், தூங்கி கொண்டிருந்த ஒருவரிடம், இளைஞர் ஒருவர் செல்போன் திருடியிருக்கிறார்..

இதையடுத்து, அந்த வழியாக வந்த போலீஸ்காரர் தங்கப்பாண்டி, பைக்கிலேயே துரத்தி சென்று, அந்த நபரை பிடித்து கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தார். அந்த திருடன் பெயர் முத்துக்குமார்.. 20 வயதாகிறது.. கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவராம். கஞ்சா அடிப்பதற்கு பணம் இல்லையென்றால், உடனே செல்போனை திருடுவாராம்.. அப்போதைக்கு கிடைக்கும் குறைந்த விலையில் விற்றுவிட்டு, அந்த பணத்தில் கஞ்சா வாங்கி அடிப்பாராம்..

ஆட்டோ டிரைவர்: அந்தவகையில், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுதான் இவருக்கு அடிக்கடி கை கொடுக்குமாம். கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் ஆட்டோவில் தூங்கிக்கொண்டிருக்கும் டிரைவர்கள் உட்பட, அரும்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் தூங்கி கொண்டிருக்கும் பயணிகள் வரை செல்போன் திருடுவாராம்..

பிடிபட்ட நபர் மீது , ஏற்கனவே நிறைய கஞ்சா, திருட்டு கேஸ் இருக்கும்நிலையில், தற்போதுதான் சிக்கி உள்ளார். இப்போது இந்த இளைஞர் புழலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ்காரரை உயரதிகாரிகள் பாராட்டினார்கள்.

கோயம்பேடு: வெளிமாநிலங்களிலிருந்து போதைப்பொருட்கள் கோயம்பேடு பகுதிக்கு சப்ளை செய்வதாக ஏற்கனவே பல புகார்கள் போலீசுக்கு சென்றிருந்தன. அதனால்தான், கோயம்பேட்டு மார்க்கெட்டில், காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

முக்கியமாக, சிசிடிவி கேமராக்களை அதிகப்படுத்தி, மார்க்கெட்டுக்கு வரும் சரக்கு வாகனங்களை தணிக்கைக்கு உட்படுத்துவதன் மூலம் போதை பொருட்கள் வெளி மாநிலங்களிலிருந்து வருவதை தடை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேண்டுகோள்: எனினும், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள்யே திருட்டு சம்பவங்கள் தொடர்வதால், இதுபோன்ற சமூக விரோதிகளின் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்று காவல்துறைக்கு மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+